டெத் ரேஸ் போலாமா?

சாதாரண ரோட்டில் நாம் பைக்கில் க்ராஸ் பண்ணும்போதே லேசா எமதர்மன் எட்டிப் பார்ப்பார்! அமெரிக்காவைச் சேர்ந்த கென் பிளாக், எமதர்மன் கூடவே போய் விளையாடிவிட்டு வருகிறார். புரியலையா? கார் ஸ்டன்ட்தான் பாஸ்.

அமெரிக்காவின் பிரபல ஸ்நாக்ஸ் வகையான ‘டோநட்’ தெரியும்தானே உங்களுக்கு? டோநட் செய்வதில் செம எக்ஸ்பெர்ட் - கென் பிளாக். நீங்கள் நினைப்பது போல், இது சாப்பிடும் டோநட் அல்ல; இவர் டோநட் செய்வதும் பேக்கரியிலோ அவனிலோ அல்ல. ஒரு 4 வீல் டிரைவ் கார் இருந்தால் போதும்... ‘வ்வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ரூம்’ என தரையில் 360 டிகிரியில் சுழன்று அம்சமாக டோநட் மாதிரியே செய்து அசத்தி விடுவார் கென் பிளாக். சிம்பிளா சொல்றேன் பாஸ் - காதலன் படத்தில் பிரபுதேவா, நக்மாவோட உருவத்தை காலாலேயே வரைவார் இல்லையா, அதே டைப்பில் ஒரு 4 வீல் டிரைவ் காரைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்கிறார் கென் பிளாக். அதுக்காக நக்மா படம் வரையுவாரானு கேட்டீங்கன்னா, பிச்சு... பிச்சு!

நேரான பாதையில் கார் ஓட்டும்போதே யார் மேலயாவது இடிச்சு, 70-கள் ஸ்டைலில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் டிரைவர்களுக்கு மத்தியில், ‘கரணம் தப்பினால் மரணம்’ வகை ஸ்டன்ட்களை எந்தவித பிசகும் இல்லாமல், எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்து காட்டுவது கென் பிளாக்கின் ஸ்டைல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick