காமெடி ‘அட்டகத்தி’ அனுபவங்கள்! | TV Comedians Kalakkapovathu yaaru Naveen and Sharath Jolly Interview - Timepass | டைம்பாஸ்

காமெடி ‘அட்டகத்தி’ அனுபவங்கள்!

சின்னத்திரை காமெடியில் ‘கலக்கப் போவது யாரு’ நவீனுக்கும் ஷரத்துக்கும் கெமிஸ்ட்ரி பத்துப்பொருத்தமும் பார்க்காமலே பக்காவாகப் பொருந்தியிருக்கும்.

ஷூட்டிங் இடைவேளையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தவர்களோடு அவர்களின் `அட்டக்கத்தி’ காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு ஜாலி அரட்டை...

``நமக்குச் சொந்த ஊரு காஞ்சிபுரம் மக்கா. மெக்கானிக்காஆம்சமா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒர்க்‌ஷாப்ல நான் வேலையை ஆரம்பிக்கிற டைமே கரெக்ட்டா பத்து மணிதான். ஆனா, நான் எட்டரை மணிக்கே கடையில டூட்டி பார்க்கப் போயி நின்னு ஓனருக்கே வியர்க்க வெச்சிடுவேன். வேற ஒண்ணுமில்லை, நான் சைட் அடிச்ச புள்ள பள்ளிக்கூடம் போறதைப் பார்க்கத்தான். அதுவும் என்னைப் பார்த்து காதல் சந்தியா கணக்கா சிரிச்சுட்டுப் போகும். எங்கே அதைப் பார்க்க முடியாமப் போயிருமோனு தினம் காலையில சில நேரங்கள்ல ஏழு மணிக்கெல்லாம் ஓனரை எழுப்பி சாவி வாங்கிட்டு வந்து மங்களகரமா கடையைத் திறந்து உட்கார்ந்திருப்பேன். `பரவாயில்லையே நம்ம பய பயங்கர வேலைக்காரனா இருக்கானே!’னு ஓனரே கண்ணுல தண்ணி வெச்சுப்பார். `அடேய்... இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்குறியேடா எனக்கே என்னையப் பார்க்குற மாதிரி இருக்கு!’னு அநியாயத்துக்கு பீல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick