சுட்ட படம்

ஞானப்பழம்

ந்த வார சுட்ட படம் பகுதியில் வேலு பிரபாகரனின் `அசுரன்'. ஆர்.கே.செல்வமணியின் கதை(?), கேப்டன் பிரபாகரனின் தொடர்ச்சி போன்ற பில்டப்களோடு வெளிவந்த இந்தப் படம் ஹாலிவுட்டில் அர்னால்ட் நடிப்பில் ஹிட்டடித்த `பிரிடேட்டர்' படத்தின் அப்பட்டமான காப்பி!

சாஸ்திர சம்பிரதாயப்படி, `பிரிடேட்டர்' படத்தின் கதையை முதலில் பார்ப்போம். ஆர்மி மேஜரான அர்னால்ட்... மேக், பில்லி, கூப்பர், ராமிரேஸ், ஹாக்கின்ஸ் உள்ளிட்டவர்களோடு ஒரு சி.ஐ.ஏ மிஷனுக்காக வால் வெர்டே என்ற நாட்டுக்குச் செல்கிறார். போராளிக் குழுவால் கடத்தப்பட்ட சி.ஐ.ஏ அதிகாரி ஒருவரை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வருவதுதான் வேலை. இந்தக் குழுவின் கண்காணிப்பாளராக உடன் வருகிறார் அர்னால்டின் பழைய நண்பரான தில்லன். நடுக்காட்டில் இறக்கிவிடப்படும் இந்தக் குழு ஒரு ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களைக் கண்டுபிடிக்கிறது. அதில் பயணித்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதையும் கண்டறிகிறார்கள். இதற்கு காரணம் அந்தப் போராளிக்குழுதான் என்ற முடிவுக்கு வரும் அவர்கள் ஆவேசமாய் அந்த கெரில்லாப் படையின் இருப்பிடத்தைத் தாக்கு கிறார்கள். எல்லோரையும் கொன்ற பிறகு உண்மையைச் சொல்கிறார் தில்லன். `அந்தக் குழுவிடம் பணயக் கைதிகள் யாருமில்லை. சி.ஐ.ஏ ரகசியங்களை உளவறிந்த அந்த கெரில்லாப்படை அதை உலக நாடுகளுக்கு விற்க முயற்சித்ததால் அவர்களைக் கொல்லவே இந்த டீம் அனுப்பப்பட்டது' என்ற உண்மைதான் அது. ஹெலிகாப்டர் அருகே செத்துக்கிடந்த வீரர்களும் இந்த மிஷனுக்காக அனுப்பப்பட்டவர்கள்தான் என்ற உண்மையையும் சொல்கிறார் தில்லன். இதனால் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறது. தாக்குதலின்போது பிடிப்பட்ட அன்னா என்ற பெண்ணோடு காட்டு வழியே திரும்புகிறது அர்னால்ட் அணி. இவர்கள் செல்வதை மர உச்சியில் இருந்து ஓர் உருவம் பார்த்துக்கொண்டிருக்கிறது. திடீரென அன்னா இவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, அவளைத் துரத்துகிறான் ஹாக்கின்ஸ். அப்போது அவன் முன்னால் குதிக்கும் அந்த உருவம் அவனைக் கொடூரமாக கொன்று உடலைத் தூக்கிச் செல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick