சினிமால்

  ‘திருமலை', `ஆதி' படங்களை இயக்கிய ரமணா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் ஒரு படத்தை இயக்கத் தயாராகி இருக்கிறார். `வண்ணம்' என பெயரிடப்பட்டுள்ள இதில், ஹீரோவாக அரவிந்த்சுவாமி, ஹீரோயினாக மஞ்சு வாரியரும் நடிக்கிறார்கள். சூப்பர் ஜோடி!

   தெலுங்கு சினிமாவில் இளசுகளின் சாய்ஸாக இருக்கும் நடிகை ரஷி கன்னாவுக்குத் தமிழில் ஏகப்பட்ட டிமாண்ட். பல கதைகளைக் கேட்டவர், இறுதியில் அதர்வா ஜோடியாக `இமைக்கா நொடிகள்', சித்தார்த் ஜோடியாக `சைத்தான் கா பச்சா' ஆகிய இரு படங்களில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். புத்திசாலிப் பொண்ணு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick