எனக்கே உங்களைப் பார்க்கணும்போல இருக்கே!

சில கேரக்டர்களை நாம் பார்த்திருக்கக்கூட மாட்டோம். ஆனால், அவர்களின் அதிரிபுதிரி செய்கைகளை எல்லாம் பார்க்கும்போது, ‘என்னாது இப்படி ஆளுங்க எல்லாம் பூமியில் இருக்காங்களா?' என மூளைக்கு ஹார்ட் அட்டாக் வரும். அப்படித் தங்களின் பராக்கிரமங்களால் ‘யார் சாமி இவங்க? எனக்கே இவங்களைப் பார்க்கணும் போல இருக்கே!’ என ரமணா சிங் ரேஞ்சுக்கு யோசிக்கவைக்கும் சில ஜீவன்களின் லிஸ்ட் இது!

யூ-டியூப் யூத்துகள்

உகாண்டா நாட்டு ஆல்பமோ, உக்ரைன் நாட்டுப் படமோ... ஏரியா பற்றி எல்லாம் கவலையேபடமால் கமென்ட்டில் தல - தளபதி சண்டை போடும் புண்ணியாத்மாக்கள் இவர்கள். சாதாரணமாய்த் தொடங்கி, கோஷ்டியாய்க் கொடிபிடித்து... கடைசியில் இவர்கள் புண்ணியத்தில் வெளிநாட்டுக்காரர்கள் தமிழ்க் கெட்டவார்த்தைகள் தெரிந்துகொள்வதுதான் மிச்சம். என்ன வீடியோவா இருந்தாலும் எப்படியோ லிங்க் பிடிச்சு `தல - தளபதி'யை உள்ளே கொண்டு வர்ற உங்களைப் பாக்கணும் போல இருக்கு பாஸ்!

ஆம்புலன்ஸ் ஃபாலோயர்கள்

ஹெவி ட்ராஃபிக்கிலும் பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் கேட்டதும் பதறி ஒதுங்கி வழிவிடுவான் அப்பிராணித் தமிழன். இதுதான் சாக்கு என அந்த கேப்பில் சர்ரென பறக்கும் ‘பைக்’ ரேஸர்களை எல்லாம் பார்த்தே ஆகணும். இல்லை இல்லை! அப்படி அவசரமா எங்கே போய் என்ன சாதிச்சீங்கனு கேட்டே ஆகணும் டியூட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick