வைரல் பூனை!

வீட்டுல குழந்தைங்க கேட்டுச்சுனு ஆசை ஆசையா பூனையோ அல்லது நாயோ வாங்கி... முதல் வேலையா அதுக்குப் பேரும் வெச்சுருப்போம். துருக்கி நாட்டில் இருக்கிற இஸ்தான்புல் நகரில் ஒரு பூனைக்குச் சிலையே வெச்சிருக்காங்க!

சுற்றுலா நகரமான இஸ்தான்புல் தெருக்கள்ல ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த இந்தப் பூனையோட பேரு டோம்பிலி. `காலை நீட்டி சாவகாசமா உட்கார்றதுல என்னா சொகம்?'னு இந்தப் பூனை அசந்து உட்கார்ந்த கேப்ல ஒருத்தர் போட்டோ எடுத்து நெட்ல சுற்றவிட்டார். பிறகென்ன... போட்டோ வைரல் ஆனதில் ஒரே நைட்டில் இந்தப் பூனை உலக ஃபேமஸ் ஆச்சு. பிறகு யாரு கண்ணு பட்டுச்சோ... தெரியலை. ஆகஸ்ட் மாசம் டோம்பிலி உடம்பு சரியில்லாம இறந்திருச்சு. `லைக் யூ' பூனையான டோம்பிலிக்கு இருந்த அனுதாப அலையைச் சொல்லவா வேணும்?

இஸ்தான்புல்லைச் சேர்ந்த 17,000 பேர் டோம்பிலி நினைவாக சிலை வைக்கணும்னு கண்ணைக் கசக்கிக்கிட்டே கையெழுத்துப் போட்டு மனு கொடுத்திருக்காங்க. எந்த போட்டோவால டோம்பிலி வைரலாச்சோ... அதே இடத்துல அதே போஸ்ல சிலை ரெடியானது. முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலை `உலக விலங்குகள் தினம்' அன்று திறந்துவைக்கப்பட்டது. இப்போ, இந்தச் சிலையும் இணையத்தில் வைரல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick