``தும்மினாலும் காமெடியாத் தும்முவார் வைகைப்புயல்!''

பார்க்க `வீரம்' படத்துல வர்ற வித்யூ ராமனுக்கு ஒண்ணு விட்ட தங்கச்சி மாதிரி இருக்கும் பிரகதி, வடிவேலுவின் டப்ஸ்மாஷ் பல செய்து டாப் கியரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

`சரி, பெரிய கைப்புள்ளையா இருப்பாங்க போல கை கொடுத்துட்டு வரலாம்னு பேச்சுக் கொடுத்தா... ``நான் சென்னை அண்ணா நகர்ல உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் ஸ்கூல்ல ப்ளஸ்-ஒன் படிச்சிட்டு இருக்கேன் அக்கா’ என்று கொழந்தப் புள்ளையாய் `குட் மார்னிங்' சொல்கிறார்.

``வெறும் பிரகதி ‘பாப்புலர்’ பிரகதி ஆன கதையப் பத்தி சொல்லு?''


``எனக்கு ஃபேஸ்புக்கை விட ரொம்ப பிடிச்சது இன்ஸ்டாகிராம்தான். போன வருஷம் விளையாட்டா ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவைப் பண்ணி  அதுல அப்லோட் பண்ண அங்க ஹிட் ஆகிச்சு. அப்படியே ஃபேஸ்புக்லயும் கொஞ்சம் கொஞ்சமா நம்ம புகழ் பரவ ஆரம்பிச்சுடுச்சு. இப்போ எனக்குனு ஒரு பேஜ், அண்ணன் க்ரியேட் பண்ணித் தந்தார். ரெகுலரா ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க டப்ஸ்மாஷ் அப்லோட்னு இந்த குவார்ட்டலி லீவ் போரடிக்காம ஜாலியா போயிட்டு இருக்குக்கா.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick