வவ்வால் பொண்ணு!

டங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களைப் போல வேடமணிந்து ஆங்காங்கே பலர், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிக்கொண்டிருப்பார்கள். இதில் பல வேடிக்கையாக இருந்தாலும், சில நபர்கள் நிஜ ஹீரோக்கள் போலவே சாகசங்கள் செய்து பிரமிக்க வைப்பார்கள். அப்படிச் சமீபத்தில் ரஷ்ய மக்களை நடுக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண் பேட்மேன்.

பேட்மேன் படங்களைப் பார்த்துப் பார்த்து  நாடி, நரம்பு, ரத்தம், எலும்பு என்று உடம்பு முழுக்க சாகசவெறி ஊறிப்போன `காப்ஸரோ' எனும் பத்தொன்பது வயது இளம்பெண்தான் கரண்ட் கம்பிகளுக்குள் புகுந்து மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கிறார். மின்சார ரயிலின் மேலே செல்லும் ராட்சத வொயர்களைப் பார்த்தாலே எல்லாப் பாகங்களிலும் உதறல் எடுக்கும் நமக்கு, இந்தப் பெண் ரயில் கூரையின் மேலே படுத்தபடி வித்தையைக் காட்டுவதைப் பார்த்தால், அல்லு கிளம்புவதில் ஆச்சர்யமில்லை. பனிச்சறுக்கு, நீர்ச்சறுக்கு போல ரயில் சறுக்கு விளையாட்டில் புகுந்து விளையாடுகிறார் அம்மணி. ரயிலில் தொங்கிக்கொண்டும், பறந்து பறந்து பயிற்சி செய்தபடியும் பயணிக்கும் இவர், எப்போதாவது போரடிக்கும்போதுதான் வண்டிக்குள்ளேயே சென்று அமர்வாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick