கதை சொல்லும் கோமாளிகள்!

``அந்தப் பையன் எல்.கே.ஜி படிச்சுக்கிட்டு இருந்தான். நாங்க நாலு பேரும் கோமாளி வேஷம் போட்டு கதை சொல்லிக்கிட்டு இருக்கோம்.கதையில் யானை அழற மாதிரி ஒரு சீன். அந்த எல்.கே.ஜி பையனைக் கூப்பிட்டு யானை மாதிரி அழச்சொன்னோம். `யோவ்... யானை அழுது நீ பார்த்துருக்கியா, யானை அவ்வளவு பெரிய உருவம்! இத்துணூண்டு கண்ணு எப்படியா தெரியும்'னு கேட்டான். நான் என்னடா இது வம்பா போச்சேனு அழுது காமிச்சேன். `நீயே நல்லாதானே அழுற, அப்ப நீயே பண்ணு'னு சொல்லிட்டு ஓடிப்போயி கூட்டத்துல உட்கார்ந்துட்டான். குழந்தைகள் அவங்களோட குழந்தைத் தன்மை மாறாம இருப்பதுதானே அழகு.''-தன் கதைசொல்லி அனுபவங்களை குழந்தைத் தன்மை மாறாமல் சொல்ல ஆரம்பிக்கிறார் பூபதி.

விக்னேஷ், பூபதி, நவீன், கார்த்திகேயன்... இந்த இளைஞர்கள் இப்போது மதுரை நகரத்துப் பள்ளிக்கூடங்களில் கதை சொல்லிகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

``திருவண்ணாமலைல எழில் அண்ணா `களிமண் சிறகுகள்'னு குழந்தைகளுக்குக் கதை சொல்லிக் கொடுத்திட்டு இருந்தார். மனுஷன் ஆறு அடிக்கு மேல இருப்பாரு. குழந்தைகள் எழில்ங்குற பேரைச் சுருக்கி `எலி எலி'னுதான் கூப்பிடுவாங்க. அவர் கதை சொல்லி குழந்தைகள் உலகத்துக்குள்ள திரிஞ்சதைப் பார்த்து தான் எனக்கும் கதை சொல்லி ஆகணும்னு தோணுச்சு. நானும் நவீனும் சேர்ந்து மதுரைல கதை சொல்ல ஆரம்பிப்போம்னு சும்மா ஆரம்பிச்சோம். அப்புறம் விக்னேஷும் கார்த்திகேயனும் சேர்ந்துகிட்டாங்க.ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சின்னதா சிலை செஞ்சு கொடுத்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளில நான் கிளம்பி வர்றப்போ கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தான். அந்த முத்தத்தோட ஈரம் எப்போவும் காயாம எனக்குள்ள இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick