இது வேண்டுதல் போட்டி!

ள்ளாட்சித்தேர்தலில் பிஸியாக இருந்த அதிமுக நிர்வாகிகள், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதும் அப்படியே `யூ-டர்ன்’ அடித்து தற்போது முதல்வர் நலம் பெறுவதற்கான பூஜை புனஸ்காரங்களில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். அதிலும் மதுரை அ.தி.மு.க புள்ளிகள் தங்கள் அட்ராசிட்டியை தொடங்கிவிட்டார்கள்.

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தமிழகத்தில் பல இடங்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் பல்வேறு  நிகழ்வுகளை நடத்தினாலும் மதுரையில் அமைச்சர்  செல்லூர் ராஜு நடத்திய பிரமாண்ட பால்க்காவடி, பறவைக்காவடி நிகழ்வுதான் இன்றும் பேசப்படுகிறது. காவடி எடுப்பதை ஒரு தொழிலாக உருவாக்கிப் பலருக்கும் பொருளாதார ரீதியாக உதவி இருக்கிறார் செ.ரா! அதிமுகவின் ‘ஸ்பிரிச்சுவல் ஈவெண்ட் கிங்’காக புகழ்பெற்று திகழ்ந்த செல்லூர் ராஜுக்குப் போட்டியாக மதுரையில் இன்னொருவர் வந்துவிட்டார். அவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான்! ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் என்பதால் இருவரில் யாருக்கு பவர் அதிகம் என்பதை சமீபகாலமாக பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தி வந்தார்கள். தற்போது அவர்களின் கவனக்குவிப்பு...‘வேண்டுதல்’ ஜெயலலிதாவுக்கான வேண்டுதல் நிகழ்ச்சிகளில் யார் பெரிய ஆள் எனப் பவர் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick