ஓயாமல் கேட்கும் ஓயா!

`நீங்காத மேலாடை நீங்கஎன் நிழல்கூட நீ தீண்ட ஏங்கநீள் கூந்தல் பூவின்றி வாடஅதில் நீ வந்து உன் மூச்சைச் சூடஅணைக்காத பாகங்கள் நோகஒரு அணையாத தீ நெஞ்சில் வேககையை கையால் நீ கிள்ளமெய்யை மெய்யை நான் அள்ள...

ஓயா...ஓயா ..

ஓயா தீயா...!'

-கவிஞர் லலிதானந்த் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையில் மனதை அள்ளுகிறது, `காஷ்மோரா' திரைப்படப் பாடலான ஓயா...ஓயா'! கிளாஸிக் ரொமாண்டிக் ஃபீல் கொடுக்கும் இந்த பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் கல்பனா ராகவேந்தர். ரஜினி முருகனில் `ஜிகிரு ஜிகுரு', `36 வயதினிலே' படத்தில் `போகிறேன்...' உள்ளிட்ட பல பாடல்களை திரையிலும் ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார் இவர். அமெரிக்காவில் பிஸியாக இருந்தவரிடம் வாட்ஸ் அப்பில்  ஒரு ஸ்மால் சாட் போட்டோம்.

`` `ஓயா...ஓயா'னு ரிப்பீட் மோட்ல ஓயாமல் போகுதே இந்தப் பாட்டு. எப்டிங்க இப்டி?


``இதுக்கு சந்தோஷ் நாராயணனுக்கும் அவங்க மனைவிக்கும் நன்றி சொல்லணும். ஏற்கெனவே 36 வயதினிலே படத்துல அவரோட சேர்ந்து பாடியிருக்கேன். எங்க கூட்டணி நல்ல சக்சஸ் கொடுத்துச்சு. என் மேல அவருக்கு இருந்த நம்பிக்கையால திரும்பவும் எனக்கு இந்த சான்ஸ் கொடுத்திருக்காரு. தொடர்ந்து நல்ல பாடல்களைக் கொடுப்பேன்னு நம்புறேன்.''

``36 வயதினிலே படத்தில் `போகிறேன்...' பாடலைத்தான் உங்க காலர் டியூனா வச்சிருக்கீங்க. அந்த பாடல் அனுபவம் பத்தி சொல்லுங்க?''

``நான் ரொம்ப ஃபீல் பண்ணிப் பாடிய பாடல் இது. இன்னும் சீக்ரெட் சொல்லணும்னா எனக்கும் இப்ப 36 வயசுதான். அதனால மனசோட ஃபீல் பண்ணி இதை வச்சிருக்கேன். வாழ்க்கையோட அடுத்தகட்டப் பயணத்துக்கு இந்தப் பாடல் உந்துசக்தியா இருக்கும். வயசு ஒரு மேட்டரே இல்ல. மனசு இருந்தாப் போதும் எந்த வயசுலயும் ஜெயிக்கலாம். ஐ லவ் திஸ் சாங்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick