ஆஃப் த ரெக்கார்டு!

சித்தியுடன் சண்டை போட்டிருந்த ‘கடைத்தெரு’ நடிகை அவர் தன்னைப் விட்டுப் போனபிறகு தன் மார்க்கெட் அதள பாதாளத்திற்குப் போனதை உணர்ந்து, மீண்டும் உறவை இணைக்கத் தூது விட்டிருக்கிறாராம்.

போட்டி என்றால் முதல் ஆளாக நிற்கும் ‘சண்டக் கோழி’ நடிகர் தன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்தார். இடையில் ‘பளிச்’ நடிகை சரியாக படப்பிடிப்புக்கு வராததால் சொதப்ப, ‘கிராஃபிக்ஸ்’னாலதான் லேட் எனக் காரணம் சொல்லி, போட்டியிலிருந்து விலகிவிட்டார் கோழி.

கடைசிச் சுற்றில் வெற்றி பெற்ற ‘தவ’ நடிகரைத் தேடிப் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நீங்க நடிக்கணும் எனக் கேட்க, இரண்டு நாளைக்கு இரண்டு கோடி சம்பளம் கேட்டாராம்!

‘ரௌடி’ நடிகரை `அண்ணன்' என உரிமையோடு அழைத்த ‘மீன்’ நடிகர் சமீபத்தில் ஒரு கோடி மதிப்பில் வந்த போன் விளம்பர வாய்ப்பைக் குறுக்கு வழியில் தட்டிப் பறித்துவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட அண்ணன் அப்செட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்