கதை விடுறாங்க!

`தனது காதலி வீட்டுக்குப் பெண் கேட்பதற்காகச் சென்ற கார்த்திக், அங்கே...'

- இந்த ஒருவரியை டெவலப் செய்து, டைம்பாஸ் ரசிகர்கள் எழுதிய குட்டிக் கதைகள் இது.

மணி: அங்கே தன் காதலி மணமேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அப்புறமென்ன? பந்தி நடக்கிற இடத்தில் போய் உட்கார்ந்துவிட்டான். நமக்கு சோறுதான் முக்கியம் மச்சி!

பாலா: போய்ப் பார்த்தா... காதலியோட அப்பா கார்த்திக்கோட ஃபேஸ்புக் ப்ரெண்ட்! இவனைப்பற்றி நல்லா தெரியும்ங்கிறதால... பொறுக்கிப் பயலுக்கெல்லாம் என் பொண்ணைக் கட்டிவைக்கமாட்டேன், `போடா'ன்னு சொல்லிட்டார். `ஆன்லைன் நட்புங்கிறது அவ்வளவுதானா சார்'னு வசனம் பேசி அவர் கால்ல விழுந்து சரண்டர் ஆனான். சுபம்.

ஜெயபிரசாத்: போய்ப் பார்த்தா... அப்படி ஒரு பொண்ணே இங்க இல்லைனு சொல்லிட்டாங்க. அப்பறம்தான் தெரிஞ்சுது அந்தப் பொண்ணா நடிச்சது சிவகார்த்திகேயன் ரசிகன்னு! ரெமோடா!

கார்த்திக்:
அங்கே போய் செமத்தியா வாங்கிக் கட்டிட்டு வந்தான். அடுத்த முகூர்த்தத்தில் அந்தப் பொண்ணுக்கு வேற பையனோட கல்யாணமாச்சு. ஏன்னா, இதான் எனக்கும் நடந்துச்சு. வேற பேரே கிடைக்கலையா உங்களுக்கு?

ஆனந்த் குமார்: அவனுக்குப் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் காதலியின் அக்கா வேறு யாருமில்லை... இவனின் முன்னாள் காதலி. த்ரிஷா இல்லாட்டி திவ்யா!

பொன்ராஜ்: தான் கேட்கும் மூன்று கேள்விகளுக்குப் பதில் சொன்னால்தான் திருமணம் எனக் காதலியின் அப்பா அவனிடம் சொல்கிறார். முதல் கேள்வியாக "கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்'' எனக் கேட்டதும் கார்த்திக் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அசால்ட் வினோத்: அவள் வீட்டின் முன்பு `சொல்வதெல்லாம் உண்மை குழு' இருப்பதைக் கண்டு பதறியடித்து வீடு திரும்பினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்