இதுவும் பயணக்கட்டுரை தான்! | Comedy in Travailing Time - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

இதுவும் பயணக்கட்டுரை தான்!

வீடு வரை உறவு, வீதி வரை அனுபவம்தான் பாஸ்! பயணத்தின்போது சீரியஸான அனுபவங்கள் மட்டுமில்லை; காமெடியான அனுபவங்களும் களைகட்டும். கிளுகிளு அனுபவங்கள் தொடங்கி, கிலி அனுபவங்கள் வரை டிராவலில் பஞ்சமே இல்லை. அப்படி என்னனென்ன அனுபவங்களைச் சந்திச்சோம்னு என் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை நாலு தட்டு தட்டியபோது...

புதுசா பைக் ஓட்டுற பொண்ணுங்களை ரோட்டுல பார்த்தா எல்லா கவலையும் மறந்து போகும் மக்களே! ஸ்கூட்டர் ஓட்டும்போது பொண்ணுங்க மூஞ்சில 9 சிவாஜி கணேசன், 12 உலக நாயகன்களைப் பார்க்கலாம். எங்க ஊர்ல ஒரு பொண்ணு, ‘அதெல்லாம் தைரியமா காலேஜ் போயிடுவேன் டாடி’னு ஸ்கூட்டியை எடுத்துட்டுக் கிளம்ப, முக்கில் முக்குழி சுட்டுக்கொண்டிருந்த ஒரு பாட்டியோட கடையில ஸ்கூட்டியைச் சொருகிடுச்சு. அந்த ஏரியாவும் ஹரி பட ஷூட்டிங் ஸ்பாட் மாதிரி ரணகளம் ஆகிப் போச்சு. ‘அபியும் நானும்’ பட பிரகாஷ்ராஜ் மாதிரி அவங்க அப்பா பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்ததால, பனியாரத்துக்கும் பாட்டிக்கும் பேமென்ட் செட்டில் பண்ணி, தன்னோட மகளைக் கைத்தாங்கலா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனது... செம டிராஜெடி பாஸ். ‘பாட்டி மேல ஸ்கூட்டி ஏத்துன பியூட்டி’னு யாராவது கமென்ட் போட்டீங்கன்னா பிச்சு பிச்சு!

சீஸன் டைம்ல பஸ்ல டிக்கெட் கிடைக் கிறதே பெருசு. இதுல விண்டோ ஸீட்டுக்கெல்லாம் ஆசைப்படலாமா மக்கா! ‘‘இதான் உங்க ஸீட், உட்காருங்க’’னு நம்ம விண்டோ ஸீட்காரர் பாசமா கூப்பிட்டு உட்கார வெச்சார். ‘ச்சே... நல்ல மனுஷன்யா’னு நினைச்சுக்கிட்டே உட்கார்ந்தா, சீட்டுக்கு நடுவுல இருக்கிற ஆர்ம் ரெஸ்ட்ல மனுஷன் நம்மளைக் கைவைக்க விடவே மாட்டேங்கிறார். மனுஷன் ஒண்ணுக்குப் போகக்கூட கீழே இறங்காம அந்த ஆர்ம்ரெஸ்ட்டில் கை வெச்சுப் பார்த்துக்கிட்டார்னா பார்த்துக்கோங்களேன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க