இவன் நம்ம ஆளு!

‘இதெல்லாம் என்ன பெரிய விஷயம் நாங்கள்லாம் அந்தக் காலத்துல’னு ஆரம்பிக்கிற குரூப்புகளின் அக்கப்போர்களைக் கேட்டிருக்கீங்களா? அச்சச்சோ ரகம்தான்!

நாங்கெல்லாம் அந்தக் காலத்துல அரிக்கேன் விளக்கைக் கொளுத்தி வெச்சுதான் படிச்சோம்!

ஏங்க, அந்தக் காலத்துல கரன்ட்டே இல்லை. கரன்ட் இல்லைனா, விளக்கை வெச்சுதானே படிக்கணும். இதெல்லாம் பெருமையா? இப்பவும் சில நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஓடிக்கிட்டு இருக்கிறதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?

ந்தக்காலத்துல பரமக்குடியில் இருந்து பாண்டிச்சேரி வரைக்கும் நடந்தே போவோம் தெரியுமா?

ஆமா, அவ்வளவு ஊரு இருந்தும் நீங்க ஏன் பாண்டிச்சேரிக்கு போனீங்க, சும்மாதானே? சரி அதை விடுங்க. தமிழ்நாட்டுல படம் ரிலீஸ் ஆகலைனா, எங்களை மாதிரி பாண்டிச்சேரிக்கு போய்ப் படம் பார்த்திருக்கீங்களா? #யாருகிட்ட!

போ
ன்ல அப்படி என்னதான்டா இருக்கு. என்னத்ததான்டா பேசுவீங்க?

எத்தனை நாளைக்குதான் இதே கேள்வியைக் கேட்டுக்கிட்டே இருப்பீங்க?வீட்டுத்திண்ணையில் கும்பலாக உட்காந்துக்கிட்டு நீங்க என்ன பண்ணீங்களோ, அதையேதான் கொஞ்சம் மாடர்னா பண்ணிக்கிட்டு இருக்கோம்!

ந்தக்காலத்துல சளி பிடிச்சா துளசியை அரைச்சுத் தூர் வாருவோம், ஓடிப்போயிடும். இப்பெல்லாம் நீங்க ஹாஸ்பிடலுக்கு ஓடிப்போயிடுறீங்களே?

துளசியைத் திங்க ரெடிதான். அதைக் காணோமே? #இப்ப நாங்க என்ன செய்ய...?

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்