சினிமால்

கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி இன்று வரை மிகவும் இளமையாக இருக்கும் காமெடிப் படம் தான் ‘பஞ்ச தந்திரம்’. இன்றைய பார்ட்2 காலத்தில் அந்த படத்தின் பார்ட்2வையும் எடுத்தால் என்ன என யோசித்த கமல், உடனடியாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து பேசியிருக்கிறாராம். கிரேசி மோகன் வசனம் எழுத, அதே டீமை வைத்து பார்ட் 2வை உருவாக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம். முழு திருப்தியான காமெடிப் படம் கொடுத்து பத்தாண்டுகள் ஆவதால் கமல் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்!

`வடசென்னை' படத்தில் கெஸ்ட் ரோல் என்றாலும், முக்கியமான கேரக்டர் என்று ஜீவாவை நடிக்கக் கேட்டனர். அவர் மறுக்க, அதில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ரௌடியாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு ஹீரோயின் ஜோடியாம். விலைமாதுவாக நடிக்கும் ஆண்ட்ரியாவின் கணவராக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்