ஆஃப் த ரெக்கார்டு!

‘வீர தீர’ படம் உருவாகி வந்தபோதே, அதன் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் இயக்குனரை மாற்றி விட்டாராம் ‘கபடி’ ஹீரோ. வேறு ஒரு புது இயக்குனர் இயக்கத்தில் தான் மீதி படத்தை முடித்தார்களாம்.

தாடி இயக்குனரான நாடோடி நடிகரிடம் நிறைய மாற்றமாம். தன் கடைசி இரண்டு படங்களிலும் ஒரே நாயகிக்கே வாய்ப்பை கொடுத்ததோடு அவருக்கு மற்ற படங்களிலும் சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறாராம். அவரை ரொம்பவே அக்கறையோடு பார்த்துக் கொள்கிறாராம்.

‘ஒல்லி’ நடிகருடன் ‘பால்’ நடிகை இணைந்து நடிப்பது பிடிக்கவில்லையாம் நடிகரின் `கூல்' மனைவிக்கு! இதனால் அவரைக் கணவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விடாமல், தடுக்கும்  வேலைகளில் பிஸியாக இறங்கியுள்ளாராம்.

மத்தான நடிகை தெலுங்கில் ஜூனியர் நடிகருடன் நடித்துள்ள படத்தில் இன்னொரு நாயகியான கண்மணி நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இசை வெளியீட்டில் கூட பங்கேற்கவில்லையாம் சமத்துப் பொண்ணு.

வி
ரல் நடிகரான தன் மகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கென்றே தனியாக சொத்து சேர்த்து வைத்திருந்தவர் தாடிக்காரர். ஆனால், சமீபத்தில் தன் மகன் நடித்த படம் ரிலீஸ் ஆகக் கூடாது என `இறங்கி' வேலை பார்த்து வருகிறாராம். புத்த இயக்குனர் சம்பளமே கொடுக்காமல் மகனை ஏமாற்றப் பார்ப்பதால் வந்த விபரீதக் கோபமாம்!

‘வெ
ற்றி’ சேனல் தொகுப்பாளினியாக இருந்தவருக்கு மண வாழ்க்கை சரியாக இல்லை. தற்போது தனியாக இருப்பவர் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்கிறாராம். `பார்ட்டி பாட்டில் பிரதர்ஸ்'களோடு அவரை பார்ட்டிகளில் அதிகம் பார்க்க முடிகிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick