சில வார்த்தைகள்தான்!

சங்க படிக்கிற, வேலை பார்க்கிற இடத்தில்கூட தார்பாயில் தண்ணீர் ஊற்றின மாதிரி லொடலொடனு பேசிட்டு இருப்பாங்க. ஆனால், பேச்சுலர் ரூமில் சுத்தம், (இதுலேயாவது சுத்தமா இருக்கே...!) வாயை அதிகம் திறக்கவே மாட்டார்கள். அப்படியே திறந்தாலும் டெம்ப்ளேட்டான சில வார்த்தைகள்தான் அவர்கள் வாயில் இருந்து வரும். அது என்னன்னு பார்ப்போமா...

சாவியை வெச்சுட்டுப் போ.

நைட்டுக்கு நீ சமைச்சுடு.

சீக்கிரம் வெளியே வாடா.

ஒரு பத்து ரூபாய் இருந்தால் கொடு.

ஜட்டியை மட்டும்தான் இன்னும் ஷேர் பண்ணலை.

ஹவுஸ் ஓனர் மட்டும் ரூமைப் பார்த்தால் கண்ணீர் விட்ரும்.

அடுத்த மாசம் வாஷிங் மெஷின் வாங்கிடுவோம்.

எவன் ஷூடா அது? ச்சை.

லைட்டை அமர்த்துங்கடா, தூக்கம் வருது.

உன் சட்டை என்ன சைஸ்?

ஆஸ்ட்ரேல தட்டுங்கடா நொன்னைகளா.

மச்சான், நாளைக்கு என்னை சீக்கிரம் உசுப்பி விட்ரு.

கோலம் போடுறதுக்கு முன்னூறு ரூபாயாடா?

போர் அடிக்குது, உன் லவ் ஸ்டோரி சொல்லு.

நைட்டு வர லேட் ஆகும்டா.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick