கதை விடுறாங்க!

`ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த கோபால் தன் முன்னாள் காதலியைப் பார்த்தான்'

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய ஜாலி கதைகள் இதோ..!

லூயிஸ் செல்வராஜ்: அவள் தன் கணவனிடம் `இவர்தான் என் முன்னாள் காதலர்' என்றாள். பின் இருவரும் சிரித்தபடி விடைபெற்றுக்கொண்டார்கள். எப்படி சகஜமாக இந்த மனிதனால் ஏற்றுக்கொள்ள முடிகிறதென்று கோபால் மண்டையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான்... அவள் கணவனுக்குக் காது கேட்காது என்று தெரியாமல்!

பிரேம் விஜய்: மெஷினில் தேய்த்துத் தேய்த்து இளைத்து துரும்பாய்ப் போன தன் க்ரெடிட் கார்டை ஒரு முறை பாவமாய் எடுத்துப் பார்த்துக்கொண்டான். ஏனோ அவளின் புது பாய் ஃப்ரெண்ட் மஞ்சள் தண்ணி தெளித்த ஆடாகவும், பக்கத்தில் அவள் கிடா வெட்டும் பூசாரியாகவும் கோபாலின் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

சண்முக சுந்தரம்: அப்போது அவள் செல்போனில் யாரிடமோ  `நெட் கார்ட் போட்டு விடுடா ப்ளீஸ்' னு கெஞ்சிக்கொண்டிருந்ததைப் பார்த்து, ``நீ இன்னும் திருந்தவே இல்லையா?'' என மனதுக்குள் அவளைத் திட்டியபடி நடையைக் கட்டினான்.

சதீஷ்குமார்: அருகிலிருந்த புக் ஷாப்பில் 'டைம்பாஸ்' புக்கை வாங்கிக்கொண்டிருந்தாள். அதைக்கண்ட கோபாலுக்கு எல்லாம் புரிந்தது.

ஹாஜி மஸ்தான்: ரக்சா பந்தன் வேறு... ஒருவேளை கைல பேண்ட் கட்டி `அண்ணான்னு கூப்பிடுவாளோ?' எனப் பயந்து, அவள் கண்களில் படாமல் தப்பித்து ஓடினான்.

கார்த்திக்: கோபால் தன் காரில் ஏறி  எஃப்.எம் ஆன் செய்தான். `நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்' பாடல் பாடிக்கொண்டிருந்தது.

ஈஸ்வர் கிருஷ்ணா: அவளோ `இவன் ரமேஷுக்கு முன்னாலேயா, இல்லை ராஜேஷுக்குப் பின்னாலேயா?' என யோசித்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick