பஸ்ஸு பறபற...

றக்கும் ரயிலையே நாம் இன்னும் அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, விரைவில் சீனாவின் சாலைகளில் பறக்கும் பஸ் ஓடப்போகிறது. சீனாவில் வாகனங்களின் உபயோகம் அதிகமானதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. மக்களுக்குப் பயன்படும் விதமாய் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வருமானத்தையும் பெருக்கும் டூ இன் ஒன் ஐடியாதான் இந்தப் பறக்கும் பஸ். Transit Elevated Bus எனப்படும் இந்த `3D எக்ஸ்பிரஸ் பஸ்' ஐடியா 2010-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற `ஹை-டெக் எக்ஸ்போ'வில் முன்வைக்கப்பட்டது.

சீனர்கள் தம் மூளையை பிரிச்சுப்போட்டு யோசிச்சு இந்த டெக்னிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேருக்கு நேரே போய் முட்டினால்தானே விபத்து நடக்கும்? பஸ்ஸே ரோட்டில் இரண்டு ப்ளாட்ஃபாரத்தை மட்டும் தொட்டுகிட்டுப் போகும். ஜாலியா இருக்குல்ல? காரோ பைக்கோ இனி சைடு வாங்கிப் போகத் தேவை இல்லை. `சின்னத்தம்பி' கவுண்டமணி போல நடுவால புகுந்து போகலாம். சுரங்கப்பாதை ஃபீல்தான் கிடைக்கும். அதுக்கு வசதியா பஸ்ஸோட பேஸ் மட்டம் ஏழு அடி உயரத்தில் இருக்கு.  இதனால் இந்த பஸ் பயணிக்கத் தனியாக சாலை தேவையில்லை. கார்கள் சென்றுகொண்டிருக்கும்போது அதற்குச் சற்று மேலேயே தவழ்ந்து செல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick