சூ மந்திரக்காளி!

ன்விசிபிள் உடை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘தி ஈஷூ’ நிறுவனம். ஆனால் இந்த உடையை அணிந்தால், ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களில் நமது உருவமானது மறைந்துவிடும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. காரணம், இந்த உடையானது ஃப்ளாஷ் பயன்படுத்தும்போது ஒளியை அபரிமிதமாக பிரதிபலிப்பதால், அணிந்திருப்பவரின் முகம் இருளாக மறைந்துவிடுகிறது. பாப்பராஸி தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இந்த உடையைப் பல பிரபலங்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த சயீப் சித்திக் 2009-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் தனது நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தில் பைக் ஒன்றின் ரிஃப்ளெக்டரில் ஃப்ளாஷ் பட்டு நண்பர்களின் முகம் எதுவும் தெரியவில்லை. இந்த ஐடியாவைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென நினைத்த சயீப், பாப்பராஸி தொல்லையில் இருந்து விடுபடுவதற்காகத் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து வடிவமைத்த ஆடைதான் ஈஷூ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick