அது ஒரு அழகிய டி.வி. காலம்!

டி.வி. பெட்டிக்கும் மனிதர்களோட டி.என்.ஏ-வுக்கும் தொட்டுத் தொடரும்  தொப்புள்கொடி உறவு இருப்பது இன்னிக்கு நேத்து இல்லை. டி.வி-யைக் கண்டுபிடிச்ச கிரஹாம் பெல் காலத்திலிருந்தே இருக்கு. டி.வி-யைப் பற்றி நினைச்சாலே கலர்கலராகவும், கருப்பு வெள்ளையாகவும் நினைவுகள் கலந்துகட்டி நம் மூளைக்குள்ள கவுந்து படுத்துக்கும். அதையெல்லாம் தண்ணி தெளிச்சுத் தட்டி எழுப்புவோம் வாங்க மக்கா...

 சின்னவயசில் தூர்தர்ஷன்ல வந்த ‘வாஷிங் பவுடர் நிர்மா’ விளம்பரத்தின் குட்டிப் பாடலை எப்போப் பார்த்தாலும் பாடிக்கொண்டே திரிந்து எல்லோரிடமும் கண்டமேனிக்கித் திட்டு வாங்கியிருப்போம்.

‘ஒலியும் ஒளியும்’ பார்க்கிறதுக்காக, இருக்கிற வேலைகளையெல்லாம் அரக்கப்பறக்க ஆறு மணிக்கே முடிச்சுட்டு டி.வி முன்னாடி துண்டை விரிச்சு மல்லாக்கப் படுத்திருப்போம். ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்து 50 பேர் குவிஞ்சு நம்மை வியர்வையில் அவிய வெச்சுருவாய்ங்க.

பக்கத்து வீடு, முக்கு வீடு,  மூணாவது தெருவிலிருந்து நம் வீட்டுக்கு சாயங்காலத்தில் டி.வி. பார்க்க வர்றவிங்களுக்கெல்லாம் 50 பைசா டிக்கெட் போட்டு மொத்தமா வசூல் பண்ணி ஒரு பெரிய டி.வி. வாங்கிடலாம்னு ப்ளான் போட்ருப்போம்.

‘லைஃப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்’, ‘ஹமாம் இருக்க பயமேன்’ என சோப்பு விளம்பரங்களாகக் காட்டிக்காட்டி டி.வி-க்கள் உலகமக்களைக் குளிக்கவைத்துக் குளிர்வித்துக்கொண்டிருக்கும்.

நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீர்னு ‘டொய்ங்’ங்கிற சத்தத்தோட வரும் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ங்கிற ஸ்கிரீனை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டே வெகுநேரமாக அமர்ந்திருப்போம். இப்போதெல்லாம் ஐந்து விநாடி விளம்பரம் போட்டாலே ஐநூத்தி அஞ்சாவது சேனலுக்கு மாற்றிவிடுகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick