ஆஃப் த ரெக்கார்டு!

மீபத்தில் வெளியான மருத்துவப் படத்தை இயக்குநர், ஆளும் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சியின் தலைவர்களுக்கு திரையிட்டு காண்பித்தார். இதனைக் கண்ட ஹீரோ,  `ஏன் தேவையில்லாமல் படத்தைக் கட்சிகளோடு லிங்க் பண்ணி அரசியல் ஆக்குறீங்க?' என ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிட்டாராம்!

‘கிக்’ நடிகர் அமெரிக்காவில் நடந்த ஒரு விழாவில் தமிழர்கள் சார்பில் பங்கேற்றார். ஆனால் அந்த விழாவை நடத்திய தமிழ்ச் சங்கத் தலைவர், `கிக் தமிழர்களை அவமானப்படுத்தி விட்டார், அவரை அழைத்ததற்கு வெட்கப்படுகிறோம்' என வெளிப்படையாக விமர்சித்தது நடிகரின் இமேஜை சற்றே டேமேஜ் செய்திருக்கிறது.

ல்யாணத்தைக் காரணம் காட்டி ஒல்லி நடிகர் படத்திலிருந்து விலகிய சமத்து நடிகை, தற்போது காமெடி ஹீரோவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது ஒல்லி நடிகரை கடுப்பாக்கி உள்ளதாம்!

`டபுள் ஃபேஷ்' பட புரமோஷனுக்கு நம்பர் நடிகை வரமாட்டேன் எனச் சொல்லி விட்டார். இன்னொரு நடிகையும் `தனக்கு விளம்பரங்களில் முக்கியத்துவம் கொடுக்காததால் வர முடியாது' என மறுத்து விட்டார். இதனால் ‘கிக்’ நடிகர் மட்டும் தனியாக, பாவமாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

‘மிஷின்' படத்தில் நாயகியாக நடித்து வரும் வெள்ளைக்கார பியூட்டி, எல்லா மொழிகளிலும் ஏராள தாராளக் கவர்ச்சிக்கு ஓகே சொல்வதால் பட வாய்ப்புகள் எகிறுகிறது. இதனால் மற்ற சில முன்னணி நடிகைகள் கடும் அப்செட்!

யக்குநரைப் பிரிந்த மில்க் நடிகை, படங்களில் கமிட் ஆக தீவிரமாக வாய்ப்புத் தேடி வருகிறார். ஆனால், `அவருக்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள்!' என தயாரிப்பாளர்களிடம் சொல்லி, வரும் வாய்ப்புகளைத் தடுத்து வருகிறாராம் இயக்குநரின் தந்தை.

‘மு
ட்டை’ இயக்குநர் தற்போது இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு சில பாடல்களை உருவாக்கி வைத்திருந்தாலும் படத்தில் பாடல் வைக்கும் எண்ணமே இல்லையாம். ஆனால், ஒரு ஹீரோ படத்தில் பாடல் இல்லாமல் எப்படி என இதை எதிர்த்து அவருக்கு தெரியாமலேயே இசை விழா நடத்த திட்டமிட்டு வருகிறாராம் தயாரிப்பாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick