மதுரை குலுங்க குலுங்க..!

ட்டமன்றத்தில் சமீபத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, ‘ஜனநாயகம் படும் பாடு’ எனும் தலைப்பில் தி.மு.க-வினர் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து ஒரு பிடி பிடித்தார். “பேரவைத்தலைவர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் உதாரணம், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தனபால் உதாரணம்’’ என்றவர்,

“சசிகலா புஷ்பா எம்.பி-யை, முதல்வரே அடித்திருக்கிறார், இதுவே சட்டம் ஒழுங்குக்கு சாட்சி. பேரவையில் கேள்வி கேட்டால் எந்த அமைச்சருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு என்னாச்சு என்று தெரியவில்லை!” என்று சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டு மதுரை அ.தி.மு.க. புள்ளிகளை உசுப்பேற்றிவிட்டுப் போனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick