நாங்க கேட்டோமா?

ந்த சினிமாக்காரங்க ஏதாச்சும் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுறாங்க. அதனால் ரியல் லைஃப்ல நடக்கிற கொடுமை இருக்கே...

 சந்திரனைத் தொட்டது யார் ஆர்ம்ஸ்ட்ராங்கா அமிர்தலிங்கமா?னு பாடுறதோட நிறுத்திருக்கலாம்ல. ஹீரோ பாட்டுக்கு  ஹீரோயின் சுஷ்மிதா சென்னை அலேக்கா தூக்கி மாடியில ஏறிப் போறார். அதைப் பார்த்துட்டு ``நாகார்ஜுனனைப் பார்த்தீங்களா, எப்படித் தூக்கிட்டுப் போறாரு. நீங்களும்தான் இருக்கீங்களே’’னு எல்லா கணவர்களின் எல்லா மனைவிகள்ஸ் கேட்கிறாங்க. நாங்க நாகார்ஜுன் மாதிரி இல்லைங்கிறது இருக்கட்டும். அதுக்கு முதல்ல நீங்க சுஷ்மிதா மாதிரி இருக்கணுமே...  வெயிட் தாங்காம ஸ்லிப் ஆகி மாடிப்படி உடைஞ்சா யார் பில் கட்றது?

‘அலைபாயுதே’ படத்துல ஹெட்போனை மாட்டிகிட்டு இந்த மாதவன் என்ட்ரி ஆனாலும் ஆனாரு. இந்தப் பசங்க தொல்லை தாங்க முடியலை. இசையோடவே பொறந்தவிய்ங்க மாதிரி காதுல மாட்டிக்கிட்டு அலப்பறை பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. நீங்க போன்ல பாட்டுக் கேளுங்க, இல்லை போனைப் பண்ணி பெர்சனல் லோன் கேளுங்க... காது கேட்காம எதிர்ல வர்ற எங்க மேல ஏண்டா  மோதுற மாதிரியே வர்றீங்க?

தெரியாத்தனமா எப்படியோ இட்லியை உதிர்த்து உப்புமா பண்ணுகிற மாதிரி  ‘சூர்யவம்சம்’ படத்தில் தேவயானி பண்ணினாலும் பண்ணினாங்க. எல்லோரும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆக்சுவலா அவிச்ச இட்லீ மீதம் இருக்கேனுதான் அந்த டிஷ்ஷே பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனா உப்புமா கிண்டுறதுக்காகவே இட்லி அவிச்சு அதைத் திரும்ப உப்புமாவாகப் பண்றதெல்லாம் ரொம்பத் தப்பு இல்லை, ரொம்ப ரொம்பத் தப்பு மக்கழேய்ய்ய்!

‘தனி ஒருவன்’ படத்துல போறபோக்குல, நியூஸ் பேப்பர்ல ஒண்ணாவது பக்கத்துக்கும் மூணாவது பக்கத்துக்கும் தொடர்பிருக்குனு சொல்வார் ‘ஜெயம்’ ரவி. அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு, `மூணாவது பக்கத்துல மணமகள்தேவை விளம்பரம்தான் போட்ருக்கு, இதுல என்னடா தொடர்பு இருக்குது?’னு நம்மகிட்ட வந்து கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்றவய்ங்களைலாம் என்னதான் பண்றதுனே சத்தியமா தெரியலை பாஸ். நாங்களாடா சொன்னோம்? ‘ஜெயம்’ ரவிகிட்ட போயி கேளுங்கடா அவ்வ்வ்வ்வ்...

அப்புறம் இந்த சிக்ஸ்பேக் பாய்ஸ், ஹாசினி கேர்ள்ஸெல்லாம் லைன்ல இருக்கீங்களா? சிக்ஸ்பேக்  வெச்சாலே ஓடிவந்து பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கனு நினைக்கிறது, ஹாசினி ஜெனிலியா மாதிரி பண்ணுறேனு அதைவிட கேனைத்தனமாக வழிஞ்சு வழிஞ்சு பண்றதையெல்லாம் இத்தோட நிறுத்திடுங்க. ஏன்னா, ஆக்சுவலி இந்தக் காதல்ங்கிறது என்னன்னா...

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick