கொடுக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்! | Different awards for celebraties? - Timepass | டைம்பாஸ்

கொடுக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

‘‘கமலிடம் பணம் இல்லாமல் இல்லை; ஆனாலும், ‘செவாலியே’ கமலுக்கு தமிழக அரசின் சார்பில் 10 கோடி பரிசு கொடுக்கலாம்; தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவுக்கு வீடு இல்லாமல் இல்லை; இருந்தாலும் அவருக்கு 50 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுக்கலாம்!’’ என்று தமிழக அரசுக்கு ‘சுளீர்’ யோசனைகள் வழங்கியிருக்கிறார் சீமான். வேறு யார் யாருக்கெல்லாம் என்னென்ன கொடுக்கலாம்னு சனிக்கிழமை நைட் ‘லிட்டில் ஜான்’ பக்கத்தைப் படிச்சுக்கிட்டே யோசிச்சபோது...

 பாவம் நம்ம ரஜினி... மீனா காலத்திலிருந்து சோனாக்‌ஷி காலம் வரைக்கும் ஒவ்வொரு படத்துலேயும் தன்னோட சொத்துக்களை எல்லாம் ஏழை மக்களுக்குத் தானம் பண்ணிடுறாரு! அப்படியும் அவருக்கு சொத்து இல்லாமல் இல்லை. இருந்தாலும் அவருக்கு அரசு சார்பாக, கடனைத் திருப்பிக் கட்டாத விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் பாதியை மாற்றிக் கொடுக்கலாம்.

 கருணாநிதிக்கு அப்புறம் அறிஞர் அண்ணாவோட பேரை அடிக்கடி யூஸ் பண்ற விஜய்ணாவுக்கு, ‘அறிஞர் அண்ணா விருது’ வழங்கி, ஈஞ்சம்பாக்கத்தில் தனியாகக் குடியிருக்கும் அவர் குடும்பத்துக்கு 101 லட்சம் பொற்கிழிகளை வழங்கலாம். எம்.ஜி.ஆருக்கும் அண்ணா பிடிக்கும் என்பதால், அ.தி.மு.க. ஆட்சியின்போதே இதைப் பரிசீலிக்கலாம்.

 ஒவ்வொரு படத்திலும் தம்பியையோ, அண்ணனையோ கஷ்டப்பட்டு தேடி பஸ் பிடிச்சுப் போறாரு விஷால். அவருக்கு தமிழக அரசு சார்பா நவீன வசதி கொண்ட ஏ.சி பஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கலாம். நடிகர் சங்கம் சார்பா அவர் ஆளுங்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கவும் இது வசதியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick