பாவம் வில்லன்ஸ்!

வில்லன்னா ஹை டெசிபல்ல கத்துறது... வாய்ப்புண் வந்த மாதிரி இழுத்து இழுத்துப் பேசுற வாய்ஸ் மாடுலேஷன்... மிளகாயைக் கடிச்ச மாதிரி எப்பவும் மூஞ்சிய உர்ருனு வெச்சுக்கறது இப்படி சில தகுதிகள் இருக்கணும்னு தமிழ் சினிமா நம்மை நம்ப வெச்சிருக்கு. ஈஸ்ட்மென் கலர் டைம்ல ஜெர்கின், கிளவுஸ் போட்டுத் திரிஞ்ச வில்லன்களை 80-கள்ல அரை நிர்வாணமா சுத்தவிட்டாங்க. மாறிவரும் வில்லன்கள் பண்ற சில அட்ராசிட்டீஸ்...

* சண்டையில் சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லை. சண்டை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே போட்டுருக்கிற சட்டையை வில்லன்கள் வெறித்தனமா கிழிச்சிக்கறது எதுக்குனுதான் இப்போவரைக்கும் புரியலை.

* ஹீரோ, ஹீரோயினோட டூயட் பாடுறாருன்னு வில்லன்கிட்ட சொல்லவந்தாலும், `பேட் நியூஸ்'னு தகவல் சொல்ல வந்தவனைப் போட்டுத் தள்ளுறது வில்லன்களுக்கே உள்ள கெட்ட பழக்கம். இப்படிப் பல பேரைக் காலி பண்ணதாலதான், வேலைக்கு ஆள் கிடைக்காம கைல ஏ.கே.47 வெச்சிருந்தாலும் ஹீரோவைக் குறிபார்த்து சுடத்தெரியாத அப்ரசண்ட்டிகளை வெச்சுக்கிட்டு வில்லன் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

* தன்னோட மூஞ்சியை க்ளோஸ் அப்ல கொண்டுபோய் ஹீரோயினுக்கு கிஸ் அடிக்க முயற்சிக்கிறதை, நம் ஆளுங்க பலாத்கார சீன் மாதிரி பலகாலமா காட்டி வில்லன்கள் இமேஜை ஹெவியா டேமேஜ் பண்ணிருக்காங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick