சினிமா விடுகதை!

டக்கு மடக்கு பேச்சினை பேடன்ட் ரைட்ஸ் வாங்கி வெச்சுருக்கிற பார்த்திபன் தான் இந்த வார சினிமா விடுகதையின் நாயகன். படங்களைக் கண்டுபிடிங்க பார்ப்போம்....

1. ஒளியில தெரிஞ்ச கறுப்பழகிப் படம். பாட்டுச்சொல்லி  பாடச்சொன்னா படம் பேரு டக்குனு விளங்கிடும்தானே.

2. அய்யாவுக்கெல்லாம் முன்னோடி அய்யா இவரு. அவார்டு வாங்கிக் குவிச்சாலும் பெயர் வெச்ச மாதிரி அமைஞ்சுதானுதான் தெரியலை அய்யா. படம் பேரை இப்போ கண்டுபிடிங்கய்யா...

3. ஹாலிவுட் தலைக்கட்டு பேர்ல  நம்ம ஊரு தலைப்பாகட்டுகள் நடிச்சாங்களே, அஜீத்துக்கும் இதுக்கும் தொடர்பிருந்தாலும் அவர் படத்துல  இல்லை. ஜெய்சங்கருக்கும் படத்துக்கும் தொடர்பிருந்தாலும் அவரும் படத்துல இல்லை. அது என்ன படம்?

4. வாயால மட்டுமே எல்லோரையும் ஓட்டினவர் வண்டியும் ஓட்டினாரே.  மலையாளத்துல ஓடின வண்டி இங்க வந்து மல்லாந்துடுச்சே. ஓரமா உட்கார்ந்து யோசிச்சா உடனே கண்டுபிடிச்சிடலாம் படம் பேரை...

5. படம் பேருக்கும் சந்திரமுகிக்கும் தொடர்பு இருக்கு ஆனா இல்லை. ‘செல்லமே’ வில்லன் நடிச்சாலும் இதில் பரத் இல்லையே. அவ்வையாருக்கும் டைரக்டருக்கும் தொடர்பிருக்கு. டைரக்டர் பேர்ல மான் இருக்கு. கேள்வி நம்பர் அஞ்சுன்னாலும் ஆறுக்கும் இதுக்கும் தொடர்பிருக்கு...

6. உள்ளூர்ல கொடிகட்டின படம். துபாய் அட்ரஸ் எல்லாம் சொல்லித் தந்த இவங்களுக்கு கறுப்புதானே ரொம்பப் பிடிச்சிருந்தது. மூவேந்தர்கள்ல ஒருத்தர்தான் டைரக்டர்... என்ன படம்?

7. டைட்டில் கார்டையே டைட்டிலா வெச்ச க்ளைமாக்ஸ் இல்லாத படத்தில் படம் க்ளை மாக்ஸ்ல  முடிஞ்சதே கொய்யாப் பழத்துக்கெல்லாம் விளக்கம் சொன்ன படத்துக்கு இதுக்கு மேலயும்தான் விளக்கம் வேணுமா என்ன?

8.கேள்வி கடைசின்னாலும் இவருக்கு தொடக்கம் இதுதானே. அப்போ போட்ட அந்த ரோட்டுல இப்போ வரை பல பேர் வண்டி ஓட்டு றாங்களே. விருது குவிச்ச இந்தப் படம் வில்லத்தனமான படம். இந்தப் படம் எந்தப் படம்?

- ஜெ.வி.ப்ரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick