முதல் வசனம்!

ஜினியில் இருந்து, சிவகார்த்திகேயன் வரை... பொறி பறக்கப் பன்ச் வசனம் பேசிட்டாங்க! முதன்முதலில் ஹீரோவாக, முக்கிய கேரக்டர்களில் அறிமுகமாகும்போது இவங்க பேசின ‘முதல் வசனம்’ என்னவாக இருந்திருக்கும்?

‘அபூர்வராகங்கள்’ ரஜினி
(கேட் கதவை ஸ்டைலாகத் திறந்தபடி)


‘‘பைரவி வீடு இதுதானே?”

‘அறிந்தும் அறியாமலும்’ ஆர்யா
(அடியாளிடம்)


‘‘டேய்... போய்ப் பாருடா!’’

‘காதல் அழிவதில்லை’ சிம்பு
(‘ஜெயிக்கப்போறோம்னு நினைப்பா? எங்கப்பா யாருனு தெரியும்ல?’ எனக் கேட்ட ஹீரோயினிடம்)


‘‘இல்லம்மா... நீ தோத்துடுவேங்கிற நினைப்பு. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் எங்கப்பா. அப்புறம் அந்தப் படையப்பா’’

‘மெரினா’ சிவகார்த்திகேயன்
(மெரினா பீச்சில்)


‘‘எங்கே இருந்துதான் உஷார் பண்ணிக் கூட்டிக்கிட்டு வர்றாங்கனு தெரியலையே. நமக்கு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குதேடா’’

‘தென்மேற்குப் பருவக்காற்று’ விஜய்சேதுபதி
(ரத்ததான முகாமில்)


‘‘அண்ணே... வேகமா எடுத்துட்டு விடுண்ணே. காட்டுக்கு வேலைக்குப் போகணும்ல’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்