டைட்டில் வாங்க... எங்கிட்ட வாங்க!

‘திரைப்படத் துறையில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாய், புரட்சியாய் இதுவரை வெளிவராத,  ஓர் எழுத்து முதல் விரும்பும் எழுத்துகள் வரை எண் கணித முறையில் கணக்கிடப்பட்டு அனைவரையும் கவரும் வகையில் 15,000-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பெயர்கள் என்னிடம் உள்ளன. தமிழ் சினிமாக்களுக்கு புதிய டைட்டில்கள் தேவையெனில் தொடர்பு கொள்க...' - பொன்னர் விஜய் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததைப் பார்த்து அவரிடம் பேசினேன்.

“கோயம்புத்தூரில் கருமத்தம்பட்டி என் சொந்த ஊர். பெரிசாப் படிக்கலை. நெசவுத்தொழில் செய்றேன். சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு, அஞ்சு வருசத்துக்கு முன்னாடி தயாரிப்பாளர் சங்கத்தில் என் பெயரைப் பதிவு பண்ணினேன். பழைய படத்தின் தலைப்பையே புதுப்படங்களுக்கு வைக்கிறதைப்  பார்த்த பிறகுதான் இந்த வித்தியாசமான ஐடியா வந்துச்சு. கடந்த நாலு வருசமா பெயர்களை யோசிச்சு ஒண்ணொன்னா சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். அவை அத்தனையுமே சுத்தமான தூய தமிழ்ப்பெயர்கள். அவற்றில் பல பெயர்கள் கவித்துவமான பெயர்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick