ஆஃப் த ரெக்கார்டு!

‘சிவமான’ நடிகருடன் மனக்கசப்பில் இருப்பதால் அவர் படத்துக்கு போட்டியாக வெளியாகும் ‘உயிர்’ நடிகரின் படத்தை ஆதரிக்கிறாராம் ‘ஒல்லி’ நடிகர். இதனால் `உங்க படம் ஹிட் ஆக என்ன வேணும்னாலும் என்னைக் கேளுங்க, நான் செய்யுறேன்!' என சொல்லி விட்டாராம் ஒல்லி நடிகர்.

தெலுங்கு பட புரமோஷன்களுக்கு முதல் ஆளாக நிற்கும் ‘பளிச்’ நடிகை தமிழில் பல படங்களில் நடித்தாலும் எந்தப் படத்தின் புரமோஷனுக்கும் வருவதில்லையாம். தமிழில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கால்ஷீட் கிடைத்ததே போதும் என விட்டு விடுவதால் தான் இப்படி நடந்து கொள்கிறாராம். ஒரு சிலர் சங்கத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் தந்துள்ளனராம்.

‘வெற்றி’ டிவி தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி நடித்து வரும் ஆனந்தமான இனிஷியல் ஹீரோ நடிக்கும் அடுத்த படத்தில், ஹீரோயினாக ‘பால்’ நடிகையை ஜோடியாக கேட்டாராம். ஆனால் நடிகை, `ஹீரோ யாரு?'னு கேட்டுட்டு மறுத்து விட்டதால் ஆத்திரத்தில் உள்ளாராம் ஹீரோ!

மிழ் சேனலில் பிரபலமான ‘உண்மை’ நிகழ்ச்சியால் சென்னையைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சேனல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாம். பிரச்னையை திசை திருப்ப தீவிரம் காட்டி வருகிறதாம்.

‘அவசர’ இயக்குநர் அடுத்து இயக்கும் ‘கடவுள்’ போலீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் `நாயகி நான் தானே?' எனக்கேட்க, இயக்குநரை தொடர்பு கொண்டாராம் நம்பர் நடிகை. இயக்குநரோ,  ‘இப்போதைக்கு இல்லை,
அப்படி இருந்தால் சின்ன ரோலாகத்தான் இருக்கும்' எனச் சொல்லி விட்டாராம். நடிகை கொதித்து போய் விட்டாராம்.

மீபத்தில் ‘நாட்டாமை’ குடும்ப திருமண பார்ட்டி சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் குடித்து விட்டு, தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். இதில் வேடிக்கையான விஷயம், அவர்களை பிடிக்க வேண்டிய
போலீஸ், பந்தோபஸ்து கொடுத்து செல்ஃபி எடுத்ததுதான்.

‘பால்’ நடிகை, இயக்குநர் கணவரை பிரிவதற்கு முன்பு, தன் தம்பிக்கு கணவர் இயக்கிய படத்தில் முக்கியமான வில்லன் ரோலை வாங்கிக் கொடுத்தார். தற்போது இருவரும் பிரிந்து விட்டதால், தம்பி நடித்த பெரும்பாலான காட்சிகளை வெட்டி வீசி விட்டாராம் இயக்குநர். இதில் தம்பிதான் ரொம்பவே அப்செட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick