லிட்டில் ஜான்!

டாக்டர் ஜான் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எதிர் சீட்டில் அமர்ந்திருக்கும் பெண், அவனைப் பார்த்து சிரிப்பதைக் கவனித்தான். சில நாட்களுக்குப் பிறகு ஜானும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு ‘‘என் அறைக்கு வர முடியுமா?’’ என்று கேட்டான். அவள் உடனே ஆர்வமாகி, ‘‘இப்போதே வருகிறேன்’’ என்றாள். தன் அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளை ஒரு நாற்காலியில் அமரவைத்து, ‘‘உன் வாயைத் திறந்து காட்டு. நீ சிரிக்கும்போது உன் பற்களில் உள்ள கறை அசிங்கமாக இருக்கிறது’’ என்றான் பல் டாக்டர் ஜான்!

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்