கல்யாணமாலை 2.0

ருட்டுலேயே வாழ்கிற மாதிரி இணையத்துலேயே வாழ்றவங்க ஃபியூச்சரில் இப்பிடித்தானே வரன் பார்ப்பாங்க...

பெயர்    :    வாட்ஸ்அப் வைத்தி

வயது    :    (friends only).

நிறம்    :    மாநிறம்.

சிறப்பம்சம்:    வாட்ஸ்அப் குரூப்புகள் ஆரம்பித்து தீவிரமாக இயங்கி வருகிறார் இவர். குரூப்புல கோத்துவிட்டு டார்ச்சர் பண்ணுறானேன்னு இதுவரைக்கும் எந்தப் புகாரும் வந்ததில்லை. நன்கு படித்து 22 குரூப்புகளுக்கு அட்மினாக இருக்கும் இந்தப் பட்டதாரி இளைஞர், இதேபோல வாட்ஸ்-அப் குரூப்புகளில் ஆர்வமாக உள்ள... குரூப்புகளில் கோத்துவிடுவதில் கொலவெறியாக இருக்கிற, படித்த, புரொஃபைல் பிக்சர் வைக்காத அழகான மனைவியை எதிர்பார்க்கிறார்.

பெயர்    :    லைக்ஸ் பிரீத்தி

வயது    :    (only me)

நிறம்    :    மாநிறம் (போட்டோஷாப் எடிட்டிங் இல்லாமல்).

சிறப்பம்சம்:     வருடாந்திர நெட் பேக்குகள் போட்டு இணையத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் இவர், காலை வணக்கம் பதிவுகளுக்குக்கூட `அருமை தோழி' என்றும், அவர்கள் அப்லோடும் ரோஜாப்பூ புரொஃபைல் பிக்சரையும்  `நைஸ்' என ஷேர் செய்யும், ஹாய் ட்வீட்டையும் ரீட்வீட் செய்யும் பண்பான பக்குவம்கொண்ட பட்டதாரி மணமகனை எதிர்பார்க்கிறார். முதலில் லைக்கைப் போட்டுவிட்டு பின்னர் ஸ்டேட்டஸைப் படிக்கும் விநோதப் பழக்கம் உடையவரின் வரன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!

பெயர்    :    ஆன்லைன் அனிதா

நிறம்    :    மாநிறம் (இணையதளங்களில் சிவப்பு).

சிறப்பம்சம்:    முழு நேரமும் மொபைலிலும் கம்ப்யூட்டரிலும் குடியிருக்கும், ‘சாப்பிட எழுந்திரிச்சுப் போகணுமே, பசிக்காம இருக்க ஏதாவது அப்ளிகேஷன் இருக்கா?’ எனத் தேடும் லெவலில் இருக்கும் இந்தப் பெண் நன்கு சமைக்கத் தெரிந்த, வீடு சுத்தம் பண்ணத் தெரிந்த, துவைக்கத் தெரிந்த, காயப்போடத் தெரிந்த, மடிச்சு அயர்ன் பண்ணத் தெரிந்த, தினமும் பொறுப்பாக சமைக்கிற பொறுப்பான ஒரு(கண)வரை, வரனாகவும் வரமாகவும் எதிர்பார்க்கிறார்.

பெயர்    :    மார்க் மகேஷ்

நிறம்    :    நல்ல நிறம்

உயரம்    :    நல்ல உயரம்

படிப்பு    :    நல்ல படிப்பு.

சிறப்பம்சம்:    ஆன்லைனில் நம்பி ஃபாலோ செய்து ஃபேக் ஐ.டி-களால் நொந்துபோய் இருக்கும் இவர், எந்த சோஷியல் மீடியாவிலுமே கணக்கில்லாத, ஆன்லைனுக்கே பரிச்சயமில்லாத பெண்ணை வரனாக எதிர்பார்க்கிறார். மொபைலே இல்லாத வரனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick