சுக்கிரனுக்கு சுளுக்கு! | Having a bad day experience - Timepass | டைம்பாஸ்

சுக்கிரனுக்கு சுளுக்கு!

`இந்த நாள் இதைவிட மோசமா இருக்க முடியாதுல்ல!'

- அப்படின்னு நம்மள யோசிக்க வைக்கிற நிறைய விஷயங்கள் ஒரே நாள்ல நடந்திருக்கும். இதுல சில விஷயங்கள் உங்களுக்கும் நடந்திருக்குமே பாஸ்?!


* கண்முழிச்சு எந்திச்சுப் பார்க்கும்போது பப்பரப்பேன்னு விடிஞ்சிருக்கும். ஆறு மணிக்கு வெச்ச அலாரம் ஏன் அடிக்கலன்னு பேந்தப் பேந்த முழிச்சுப் பார்த்தா, சார்ஜ் இல்லாம அது ஆஃப் ஆகி அஞ்சு மணிநேரம் ஆகியிருக்கும்.

* அவசர அவசரமா பாத்ரூம் ஓடிப்போய் ப்ரஷ்ஷ கைல எடுக்கும்போது, முதல் நாளே பேஸ்ட் காலியானது ஞாபகத்துக்கு வரும். அப்புறமென்ன மொத்தக் கடுப்பையும் பேஸ்ட்ல காட்டி பிதுக்கியெடுக்க வேண்டியதுதான்.

இப்படி மோசமா போற நாள்ல பஸ்ஸுக்காக வெயிட் பண்ணுவீங்க. ஆனா, நீங்க போகவேண்டிய பஸ் மட்டும் வரவே வராது. இருபத்திச் சொச்ச பஸ் கடந்துபோனதுக்கு அப்புறம், ஒரு பஸ்ஸோட ரெண்டு வாசல்லையும் ஆளுங்க கூட்டமா தொத்திட்டு வருவாங்க. சந்தேகமே இல்லங்க... அதான் நீங்க போகவேண்டிய பஸ்.

* அரக்கப்பரக்க ஆபீஸ் போறதுக்குள்ள, நம்ம கெட்டநேரம் நமக்கு முன்னாடி ஆபீஸ் போய்  நம்ம ஸீட்ல குத்தவச்சு உட்கார்ந்துருக்கும். என்னைக்கும் சீக்கிரம் வராத பாஸ், வாசல் கிட்டத்துல மொபைல்ல பேசிட்டே நம்மள முறைப்பாரு. ஆபீஸ் முடியுறவரை நாம வறுத்தெடுக்கப்படப்போறோம் என்பதற்கான அபாய அறிகுறி அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick