உறக்க சாஸ்திரம்!

கைரேகையைப் பார்த்துக் குறி சொன்ன காலம் போய்... லேட்டஸ்ட்டாக ஒருவர் உறங்குவதை வைத்தே அவரைப்பற்றி கணித்துச் சொல்வது இளசுகளிடம் வேகமாகப் பரவிவருகிறது. அதெல்லாம் உண்மைதானா என யாருக்கும் தெரியாது. இந்தக் கணிப்புகளும் அப்படித்தான்.

* எப்போதும் கொள்கை வெறியோடு திரிபவர்களே 360 டிகிரியிலும் சுழன்று படுக்கையில் உறங்குவார்கள். அலாரம் கிளாக்கை அலேக்காக எட்டி உருட்டிவிட்டு, மறுநாள் மதியம் வரை உறங்கி அலுவலகத்தில் ஆப்சென்ட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் இவர்களுக்கு அருகே தூங்குபவர்களுக்கு, அடுத்த நாள் கட்டாயமாக உடல் வலி ஏற்படும்.

*  குப்புறப்படுத்து தலையணைக்குக் கீழ் கைகளை வைத்துக்கொண்டு உறங்குபவர்கள், தங்களது வீட்டு ஜன்னல் வழியாக ஆட்டையைப் போடும் கயவர்கள், கை வரிசையைக் காட்டினாலும் இவர்களது உடைமைகள் மட்டும் தலையணைக்குக் கீழ் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும். எழுந்ததும் சோஷியல் மீடியா நோட்டிஃபிகேஷன்கள் பார்க்காமல் இவர்களால் அந்த நாளைத் தொடங்கவே முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick