நடத்துநர் எனப்படுபவர் யாரெனில்...

`உலகத்தில் ஐநூறு, ஆயிரம் கொடுத்தாலும் சந்தோஷப்படாத ஒரே ஜீவன் கண்டக்டர் தான்'னு ஒரு சீனப் புதுமொழி இருக்குனு சொன்னாங்க. நம்ம கைவிரல் மாதிரிதான் கண்டக்டருங்களும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. அவங்களைப்பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்...

* தூக்கக் கலக்கத்துல பஸ் ஏறும் யாராக இருந்தாலும், டிக்கெட் போக மீதி சில்லறை பாக்கிவைத்து, இறங்குகிற இடம் வரைக்கும் தூங்கவிடாமல் செய்யும் நடமாடும் அலாரம்தான் நடத்துநர்கள்.

பெரும் பயணத்தின் களைப்பு, அலுப்பு, கடுப்பு இன்னபிற எல்லாம் மறக்கடிக்கும் அளவுக்கு இசையமைப்பாளர்களே மறந்துவிட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து பேருந்தில் இசைக்கவிடும் கண்டக்டர்கள் எல்லாம் நடமாடும் தெய்வங்கள். சில நேரம் இது அப்படியே உல்ட்டாவாகலாம். மரிக்கொழுந்தே... என் மல்லிகைப்பூவே...

* `சில்லறை ஒரு ரூபா இருந்தா கொடுப்பா'ன்னு கேட்ட கண்டக்டரோட நல்ல மனசு புரியாம, ‘அதெல்லாம் இல்லை. ஏன் பஸ் எடுக்குறப்போ நீங்க கொண்டு வர மாட்டீங்களா?’னு நாம எக்குத்தப்பா கேட்க... ‘டிக்கெட் 11 ரூபா. நீ கொடுத்தது 10 ரூபா. சில்லறை இருந்தா கொடு. இல்லாட்டி இறங்கு’னு நமக்கு பல்பு கொடுப்பார்.

* சிலர் எந்தச் சூழ்நிலையையும் மாற்றி நம்மை சிரிக்க வெச்சுடுவாங்க. ‘ரெண்டு தி.நகர் கொடுங்க’னா ‘இருக்கிறதே ஒரு தி.நகர் தானே’னு கூலா நகர்ந்துக்கிட்டே டிக்கெட் தருவார்.

* பஸ் ஸ்டாப்பில் இருந்து சைட் அடிச்ச ஃபிகர், நாம ஏறுற பஸ்லேயே ஏறின சந்தோஷத்துல டிக்கெட் கேட்கும்போது, ஏறின இடத்துக்கே டிக்கெட் கேட்டுருவோம். சத்தமா கேட்க வெச்சு கண்டக்டர் நம்மளைக் கலாய்ச்சுவிட்ருவாரு.

* டின்னருக்கும் ஒரு டீக்கும் ஆசைப்பட்டு ஹைவேயில் தன்னந்தனியா இருக்கிற மோட்டல்ல நம்மை அடமானம் வைக்கிற சிலரும் இருக்கத்தான் செய்றாங்க.

* யாருக்கு எப்படியோ, இரண்டு பீர் அடிச்சிட்டு பஸ் ஏறுனவனுக்கு பாதிவழியில் அவசரமா பஸ்ஸை நிறுத்துற எல்லா கண்டக்டரும் மானம்காக்கும் தெய்வம்தான்!

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick