‘காதலி’ஸம்!

ந்த ஊர் உலகத்தில் இருக்கிற எல்லாக் காதலிகளும் அவங்க காதலனைப் பார்த்துப் பேசுற / கேட்கிற வார்த்தை வெடிகுண்டுகள் இதே ரகம்தான். கமிட் ஆனவங்க சரியானு பாருங்க, சிங்கிளா இருக்கிறவங்க என்னன்னு தெரிஞ்சுக்கோங்க, ஏதோ நம்மளால முடிஞ்சது...

*    உண்மையிலேயே நீ என்னை லவ் பண்றியா?

*    பைக் எப்போ வாங்கப் போறே?

*    உனக்கு நான் முக்கியமா... உன் ஃப்ரெண்ட்ஸ் முக்கியமா?

*    ஏண்டா இப்படி மொக்கை போடுறே?

*    இப்பதான் சாருக்கு என் ஞாபகம் வந்துச்சா?

*    கேட்டாதான் வாங்கிக் கொடுப்பியா?

*    உனக்கு என்மேல கோபமே வராதா?

*    உன் போட்டோவுக்கு கமென்ட் பண்ணின பொண்ணு யாரு?

*    நான் என்ன நினைக்கிறேனுகூட உன்னால புரிஞ்சுக்க முடியலைல...

*    எப்போ உங்க வீட்ல சொல்லப் போறே?

*    எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?

*   எனக்குனு இதுவரைக்கும் நீ என்ன செஞ்சுருக்க?

*   நான் புது தோடு போட்டிருக்கிறதைக்கூட நீ கவனிக்கலை.

*    பேசாம, உன் ஆபீஸையே நீ கல்யாணம் பண்ணிக்கோ.

*    இப்பலாம் என் மேல உனக்கு அக்கறையே இல்லை.

*    ஒரு ‘ஐ லவ் யூ’ கூட சொல்லத் தோணலை உனக்கு.

இன்னும் நிறைய அணுகுண்டுகள், கோலி குண்டுகளெல்லாம் இருக்கு பாஸ். என்ன அதையெல்லாம் சொல்ல தனியா இன்னொரு இணைப்பு இதழ் போடணும். அவ்வளவுதான்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick