பூமி லேட்டா சுத்துதே...

நிலநடுக்கம், நிலவின் ஈர்ப்பு சக்தி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பூமி கொஞ்சம் தலைசுற்றி, தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மைக்ரோ நொடியளவு தாமதிப்பதாக இன்டர்நேஷனல் எர்த் ரொட்டேஷன் அண்ட் ரெஃபரன்ஸ் சிஸ்டம்ஸ் சர்வீஸ் (எத்தாத்தன்டி!) அமைப்பானது தெரிவிக்கிறது. பொதுவாக பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எனக் கணக்கிடுகிறோம். அதாவது 84,600 நொடிகள். ஆனால் சில மாற்றங்களால் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 84,600.002 நொடிகள் பூமி எடுத்துக்கொள்கிறது. இதை ஈடுகட்ட அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு நொடிகளை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ம் தேதி 1972-ம் ஆண்டு முதல் சேர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரு செகண்ட் அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றத்தால் என்னவெல்லாம் குளறுபடி ஆகிருக்குனு பார்த்தா...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick