காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்!

மிழ் சினிமாவைத் தொடர்ந்து பார்க்கும்போது வர்ற ‘ஏன்யா இப்பிடி?’ ரக கேள்விகள்தான் இது. குறிப்பா போலீஸ் சினிமாக்கள்ல நம்ம ஹீரோக்கள் பண்ணதெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறு ரகம்! சாம்பிளுக்குச் சில...

நம்ம  கேப்டன்  நடிப்பில் வந்த ‘சத்ரியன்’ படம் ரொம்ப நல்ல ஆக்‌ஷன் படம்தான். ஆனால், மனைவியை இழந்தபிறகு போலீஸ் வேலையை விட்டுட்டு குழந்தைகளுக்காக சைலண்ட் மோடுக்குப் போவார். அவரை வெறியேத்தி வம்பிழுப்பார் வில்லன் திலகன். மீண்டும் போலீஸில் சேர்றதுக்கு கேப்டன் என்ன பண்ணுவார் தெரியுமா? ட்ரெட் மில்லில் ஓடுவார், தண்டால் எடுப்பார்...அப்படியே போலீஸ் ஐ.ஜி  விஜய்குமார் ஆபிஸ்க்கு வந்து ரிவால்வரால் அங்கே இருக்குற ஷீல்டை குறிபார்த்து சுடுவார். உடனே விஜய்குமார் சிலிர்த்து எழுந்து கை கொடுத்து ‘வெல்கம்’ சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். பொடனிக்குப் பின்னாடி இருக்குற ஷீல்டை பீச்சுல பலூன் சுடுற குழந்தைகூட கரெக்ட்டா சுடுமே..! இதுக்காகவா அவரை திரும்ப போலீஸ்ல சேர்ப்பீங்க விஜய்குமார்?  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick