மாறாதய்யா க்ளைமாக்ஸு!

மிழ்சினிமா எவ்வளவுதான் மாறிட்டு வந்தாலும் பல படங்களோட க்ளைமாக்ஸ் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஏன்னா டிசைன் அப்படி!

 ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன், நாத்தனார், மாமியார் சகிதம் ஏதோ குரூப்ஃபி எடுக்கப்போற மாதிரி கும்பலாகக் கூடுவார்கள். ஒரே ஃப்ரேமில் நின்னு கெக்கேபிக்கேவென சிரிப்பே வராத டயலாக்கை காமெடிங்கிற பேர்ல சொல்லி அவங்களாகவே சிரிச்சுக்கிட்டு ஒருத்தொருக்கு ஒருத்தர் பிடிச்சுத் தள்ளிக்கிட்டு, மொத்த பல்லும் தெரிய இளிச்சபடி ‘நன்றி’ கார்டு போடுவாங்க. இப்படியான படங்கள் மட்டும் ஆறு டஜன்களுக்கும் மேல இருக்கும்.

ரெண்டாவது ரீல்ல இருந்தே வீறாப்பா முறைச்சிக்கிட்டு இருக்கிற வில்லன் குரூப்கள் அடுத்த ரெண்டுமணி நேரத்துக்குள் பாத்தா, பொசுக்குனு சரண்டர் ஆகிடுவாங்க. சரண்டர் ஆகிறதுகூட பரவாயில்லை. ‘உன் நேர்மை எனக்குப்  பிடிச்சுருக்கு’, ‘உன் நகபாலீஷ் கலர் எனக்குப் பிடிச்சுருக்கு’, ‘என்னதான் இருந்தாலும் என் பொண்னு விருப்பப்படுறா’, ‘நீ பூப் போட்ட சட்டை போட்டுருக்கே. அதனால் என் பொண்ணைக் கொடுக்கிறேன்’னு சப்பைத்தனமான விளக்கம் கொடுத்துப் படத்தை முடிப்பாங்க. பல சேகர்கள் செத்ததுக்கு காரணம் இவங்கதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick