சினிமால்

`தேவி' படம் வரை ஜி.வி.பிரகாஷ், நா.முத்துக்குமார், நீரவ் ஷா என தன் நண்பர் வட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்த இயக்குநர் விஜய் தற்போது அதைவிட்டு புதிய கூட்டணியில் தான் இயக்கும் ஜெயம் ரவி படத்தை உருவாக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, கிரீடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு ஒளிப்பதிவு செய்கிறார். அகிலோடு தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஷாயிஷா சேகல்தான் நாயகி.`நா.முத்துக்குமார் இடத்தை நிரப்புவது யார்?' என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் விடையில்லை. தெலுங்குப் படங்களைப் பார்த்து தற்போது தமிழ்ப் படங்களும் ஆடலுக்கு ஒரு நாயகி, பாடலுக்கு ஒரு நாயகி, காமெடிக்கு ஒரு நாயகி என மாறிவிட்டது. புதுமுகங்களே இரண்டு நாயகிகளோடுதான் என்ட்ரி கொடுக்கிறார்கள். அப்படியிருக்க ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசன் பேரை டைட்டிலில் வெச்சிருக்கும் அதர்வா சும்மா இருப்பாரா? ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் 4 நாயகிகளாம்! ரெஜினாதான் நாயகி என தொடங்கப்பட்ட படத்தில் பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கயல்’ஆனந்தி என மொத்தம் நான்கு நாயகிகள். இன்னும் யாராவது இருக்காங்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்