தமிழ் சினிமான்னா சும்மாவா?

ஹாலிவுட் படங்களில் ராட்சத உருவம் ஒண்ணு கண் முன்னாடி வந்து ‘சடார்’னு நின்னு பயமுறுத்துறது, வில்லன் கழுத்துல ‘சதக்’னு கத்தியைச் செருகுறது மாதிரி புல்லரிக்கிற சீன்கள் நிறையவே இருக்கும். தமிழ் சினிமா மட்டும் என்ன தக்காளித்தொக்கா? இதைவிட பயங்கரமான காட்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து களைச்சவிங்கப்பூ நாங்க...

 நாயகன் ரொம்ப சாந்தமானவர்னு நினைச்சுகிட்டு இருந்த நாயகி, ஒரு மழைநாள் ராத்திரியில் நாயகன் எங்கேயோ போறதைப் பார்த்து ஃபாலோ பண்ணுவாங்க. அவர்  பெரிய அட்டெம்ப்டை அசால்ட்டா முடிச்சுட்டு மூக்கில் ரத்தத்தோடு வந்துகொண்டிருப்பார். பின்னணியில் இடி இடிக்க, கண்ணாமுழி வெளியே வந்த மாதிரி விழித்து நம்மையும் பயமுறுத்தும் அந்த ஹீரோயின். அதுக்கு அவரே பரவாயில்லையேம்மா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick