டிபன் சாப்பிடுறீங்களா?

ன்னதான் விருந்தோம்பல் நம்ம பண்பாடுன்னாலும் எல்லாமே எந்திரமயமா மாறிட்ட இந்தக் காலத்தில் சில ஜாலியான சங்கடங்களும் நடக்கத்தான் செய்யுது.

அங்கிளுக்கு ஹாய் சொல்லு, ஒரு ரைம்ஸ் பாடிக்காட்டு, மயில் எப்படி டான்ஸ் பண்ணும், குயில் எப்படி கூவும்னு குழந்தையை டார்ச்சர் பண்றது எல்லா வீட்லயும் நடக்கிற அட்ராசிட்டி. கெஸ்ட் முன்னாடி எப்படியும் அடிக்க மாட்டாங்கனு குழந்தை பதிலுக்கு சகட்டுமேனிக்கு குட்டிச்சாத்தான் வேலையெல்லாம் செஞ்சு ரிவெஞ்ச் எடுக்கும்.

அப்பாவோட சொந்தம் வந்தா, ‘உடம்புக்கே முடியலை மதினி’னு உப்புமா ரெடி பண்ற அதே அம்மாதான்... தன்னோட தம்பி வந்தா நண்டு ரசம், சிக்கன் வறுவல் எல்லாம் பண்றதும். எல்லா அம்மாக்களுக்கு உள்ளேயும் எதிர்கால மாமியார் இருக்கத்தானே செய்றாங்க பாஸ்.

முன்னாடிலாம் கெஸ்ட் யாராவது வீட்டுக்கு வந்தா, காபி, டீ ஏதாவது தந்து உபசரிக்கிறதுதான் நம்ம பழக்கம். இப்பல்லாம் WiFi பாஸ்வேர்ட் சேர்த்துத் தர்றதுதான் நல்ல உபசரிப்புக்கான இலக்கணமாகிடுச்சு. டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick