பவர் பாண்டிகள்!

கிராமத்துல கரன்ட் மட்டும் போச்சுனு வைங்க விதவிதமா பேச ஆரம்பிச்சுடுவாய்ங்க.

  நல்ல கட்டத்துல நாடகம் ஓடிக்கிட்டு இருக்கு பத்து நிமிஷம் கழிச்சுக்  கட் பண்ணக்கூடாதுனு  கிழவிங்க கேட்க ஆரம்பிக்கும். லாரிக்காரன் கரண்ட் லைனை தட்டிவிட்டுட்டு போகும்போது `நாடகம் ஓடுதா?'னா பார்த்துக்கிட்டு இருப்பான்?

   ஏதாவது எலெக் ஷன் ரிசல்ட் ஓடும்போது கரன்ட் கட் ஆச்்சுனா அம்புட்டுத்தேன். `தோத்தது தெரியக்கூடாதுனு  கட்சிக்காரங்களே காசு குடுத்து ஆப் பண்ணீட்டாங்கலாம்டி' னு இவங்களாவே காது கண்ணுலாம் வெச்சு அதுக்கு திரட்னிங், மஸ்காராலாம்  போட ஆரம்பிச்சுடுவாங்க.

கரன்ட் கட்டாகி ரொம்ப நேரம் ஆச்சுனா எப்போ வரும்னு சொல்றதுக்கு ஊருக்குள்ள ஒருத்தன்  வெட்டியாவே சுத்திகிட்டு இருப்பான். அவன்கிட்டதான் எல்லொருமே கேட்ப்பாங்க..  ஏன்னா ஏரியா AEயோட  ஹெல்ப்பரோட  சித்தப்பா மகனோட மச்சினனின் ஃபிரண்டோட தம்பியின் நம்பர் இவர்கிட்டதான் இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா சர்க்காரோட நேரடி தொடர்பில் இருக்குறவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick