நிழலோவியம்!

ஆள் நட மாட்டம் குறைவான பகுதி என்றாலே நம் ஆட்கள் சிறுநீர் கழிப்பதிலிருந்து பலவகையான சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக போகிறபோக்கில் மாற்றி விடுவார்கள். போலீஸ் ரோந்து சென்றால்தான் அந்த இடங்களின் தன்மை மாற வேண்டும் என்றில்லை என நிரூபித்திருக்கிறார் டெல்லியில் வசிக்கும் சுவரோவியக் கலைஞரான டாகு.

அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் நிறைந்த பகுதியான லோதி காலனி, டெல்லியில் மிகவும் அமைதியான பகுதி. மற்ற இடங்கள் மாதிரியில்லாமல் இங்கே வாகன நெரிசல், சுகாதாரக் கேடுகள் கிடையாது. ஆனாலும் இப்பகுதிகளில் உள்ள சில கட்டடங்கள் கவனிப்பின்றிக் கிடந்தன. இந்தக் கட்டடங்களைத்தான் ‘காலம் அனைத்தையும் மாற்றக்கூடியது’ என்ற ஒற்றை வரியை அடிப்படையாகக்கொண்டு, டாகு தனது சுவரோவியக் கலையின் புதிய வடிவத்தைப் பயன்படுத்தி மாற்றியமைத்திருக்கிறார். மற்ற சுவரோவியங்களைப் போலில்லாமல் ஸ்ப்ரே பெயின்ட் எவற்றையும் பயன்படுத்தாமல், நகரும் நிழலோவியம் என்ற புதுமையைப் புகுத்தியிருக்கிறார்.

தனது சுவரோவியங்கள் மூலம் இந்தியாவிற்கு வெளியேயும் அறியப்படுபவர் டாகு. பல புகழ்பெற்ற ஓவியக்கண்காட்சிகளில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்த இவர், உலோகத் தகடுகளில் எழுத்துகளை வடிவமைத்து, அவற்றை சுவரில் பொருத்திவிடுகிறார். சூரிய ஒளி இத்தகடுகளின் மேல் பட்டு சொற்கள் நிழல்களாக சுவரில் பிரதிபலிக்கின்றன. சில விஷயங்கள் எல்லாம் காலத்தால் மாறக்கூடும் என்பதை சுவரில் பதித்து, போவோர் வருவோர் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்தக் கட்டடத்தின் மீது அந்த ஏரியாவின் மொத்தக் கவனமும் பதிந்துள்ளது. பகலில் நிழல் தெரியும், நைட் ஆனா என்ன பண்ணுவீங்க? என புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்பினால் தெருவிளக்கு இருக்கே பாஸ் என டாகு பல்பு கொடுக்கிறார். ரைட்டு!

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick