``வடிவேலு நல்லவரா...கெட்டவரா?''

காமெடி மற்றும் அரசியலில் கலக்கும் நடிகர் சிங்கமுத்துவிடம் ஒரு ஜாலி பேட்டி.

‘`சில வருடங்களுக்கு முன்னாடி சினிமாவுல அறிமுகமான உங்க மகன் வாசன் கார்த்திக் என்ன பண்றார்?’’

‘` ‘பாசக்கார கூட்டம்’, ‘கட்டழகன்’ என்ற இரு படங்களில் நடிக்கிறார். சில சிக்கல்கள் காரணமாக நிலுவையில் இருந்த படங்கள் அடுத்த மாதம் மறுபடியும் தொடங்க உள்ளன. அந்தப் படங்களில் காமெடி ஸ்கிரிப்ட் நான்தான் எழுதியுள்ளேன்.’’

‘`தேர்தல் நேரத்தில் பரபரப்பா இருந்தீங்க. அப்பறம் சைலன்ட் ஆகிட்டீங்க... ஏன்?’’

‘`தேர்தலில் பிரசாரம் செய்யும் நேரத்தில் பரபரப்பாகத் தெரியும். வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் அந்தப் பரபரப்பு ஓய்ந்துவிட்டது. சமீபத்தில் அம்மா அவர்களும் காலமாகிவிட்டார்கள். நடுவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையடுத்து பொதுக்கூட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மறுபடியும் ஸ்பீட் எடுக்கும். வருவேன்.’’

‘`ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆளுங்கட்சியாக எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

‘`இந்தியா முழுவதும் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுதான் உள்ளது. இளைஞர்களும் மாணவர்களும் போராடுவது நியாயமான விஷயம்.’’

‘`சினிமாவில் காமெடிக்கென்று முன்பு ஒரு குழு இருக்கும்... இப்போ அப்படி இல்லை. என்ன காரணம்?’’


‘`காமெடியன் என்று ஏன் பிரிக்க வேண்டும். அவர் காமெடி ஹீரோ என்று விட்டுவிட வேண்டியதுதான். முன்பெல்லாம் காமெடி அறிவுபூர்வமாக இருக்கும். ஆனால், இப்போது வெறும் டயலாக் மட்டும்தான் காமெடியாக இருக்கிறது. மற்றபடி ஸ்கிரிப்ட் எழுத ஆள் இல்லையா... தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லையாவென்று தெரியவில்லை.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick