தீபா அக்காவால் அரசியல் பண்ண முடியாது! | Actor Ganja Karuppu - Timepass | டைம்பாஸ்

தீபா அக்காவால் அரசியல் பண்ண முடியாது!

`தர்மதுரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கஞ்சாகருப்பு உற்சாகமாக இருக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் `தொண்டன்' படப்பிடிப்புக்காக  பண்ருட்டியில் பிஸியாக இருக்கிறார். இலவசக் கல்வி, கேன்சர் மருத்துவமனை, திருநங்கைகளுக்கு உதவிகள் என அரசியலைத் தாண்டியும் சில விஷயங்களைச் செய்துவரும் அவரைச் சந்தித்தோம்...

``சினிமாத் துறைக்கு எப்படி வந்தீங்கண்ணே..?''

``சிவகங்கையில டீக்கடை வெச்சிருந்தேண்ணே... ஷூட்டிங் எடுக்க பாலா அண்ணே எங்க ஊருக்கு வந்திருந்திருந்தார். வந்ததைப் பார்க்காமல் ஒரு பெரியவர்கிட்ட, `ஏய் பெருசு, பேப்பர்ல என்னாத்தப் பாக்குற பொம்பளப் புள்ள படத்தையா?'னு என்னோட பாடி லாங்வேஜ்ல பேசினதைக் கேட்டுப்புட்டாரு. அண்ணணுக்குப் பிடிச்சுப்போயி, `நடிக்க வர்றியா?'னு கேட்டார்ணே. உடனே கிளம்பி சென்னையில அவரு ஆபீஸ்ல லேண்ட் ஆகிப்புட்டோம்ணே. ஆபீஸ்க்கு வர்றவங்களுக்கு டீ வாங்கிக் கொடுக்குற வேலை. பாலா அண்ணன் எடுத்த `பிதாமகன்' படத்துல கஞ்சா கருப்புவாவே அறிமுகமானேன். `ராம்', `சுப்ரமணியபுரம்' என அடுத்தடுத்த படங்கள் கிடைச்சது. 250 படம் தொட்டாச்சுண்ணே. பத்து படங்கள் போயிக்கிட்டிருக்குண்ணே!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick