ஆஃப் த ரெக்கார்டு!

* அணில் நடிகர் நடிப்பில் வெளியான கடவுள் படத்துக்கு விமர்சனங்கள் தாறுமாறாக வந்ததில் அணில் செம அப்செட். இதனால் ஏழு நிமிடக் காட்சியை வெட்டி எறிந்து ரீ-எடிட் செய்திருக்கிறது படக்குழு!

* நம்பர் நடிகையின் ட்விட்டர் கருத்தினால், முக்கிய பொறுப்பில் இருக்கும் கருப்பு நடிகர் செம காண்டாகிவிட்டார். அவரின் படப்பிடிப்பை நடத்த விடமாட்டேன் என்று கொந்தளித்துவருகிறார் கருப்பு. அதனால் இவரை சாந்தப்படுத்த நம்பர் நடிகை சார்பில் சிலர் பேசிவருகிறார்களாம்.

* பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் நடிக்கும் கீ நடிகை ஷூட்டிங்குக்குப் பல  கண்டிஷன்களைப் போடுகிறாராம். சாந்தமான நடிகையின் ரோலைவிட என்னுடைய ரோல் கெத்தாக இருக்கணும் என அழுத்தம் கொடுக்கிறாராம்!

* நடை நாயகன் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம்தான் முடிகிறதாம். ஜேம்ஸ்பாண்ட் லெவலில் படம் இருக்கும் என்று பலரிடம் ஒல்லி இசை சொல்லியிருக்கிறார். அவ்வாறு சொல்ல வேண்டாம் என்று தடா போட்டிருக்கிறது படக்குழு.

* இனிஷியல் காமெடியன் புதுச்சேரியில் பேசியதற்காக பெரிய நடிகர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இருந்தாலும் கத்தி எங்கிருந்து பாயும் என்று தெரியாததால், காமெடியன் கொஞ்சம் பதற்றத்துடன் இருக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick