விஜய்யின் உணவு அரசியல்! | Vijay told about food in movies - Timepass | டைம்பாஸ்

விஜய்யின் உணவு அரசியல்!

ட்லி சாப்பிடுறதை வெச்சு விஜய் சொன்ன கம்யூனிசத்தை மட்டும்தானே எல்லாரும் மைண்ட்ல வெச்சிருக்கோம். சாப்பாட்டை வெச்சு இன்னும் என்னென்னவோ குறியீடுகள் சொல்லியிருக்கார் விஜய். அதையும் என்னனு பார்த்துடுவோமா?

‘வேட்டைக்காரன்’ படத்துல அனுஷ்காவோட பாட்டி செஞ்சு கொடுத்த நண்டுக் குழம்பை சாப்பிட்டுக் காரம் தாங்காம கண்ணீரோட எழுந்திருச்சு வருவார் விஜய். இதுல இருந்து என்னா சொல்ல வர்றாருன்னா, `சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுற மாதிரி சமைங்க. அட்லீஸ்ட் காரமா சமைச்சா காது கிழியிறதுக்குள்ள பக்கத்துல ஒரு டம்ளர் தண்ணியைக் கட்டாயம் வைங்க’னு குறியீடாகச் சொல்லிட்டுப் போறார்.

‘போக்கிரி’ படத்துல அசின் உப்புமா கொண்டுவந்து சாப்பிட்டுப் போவாங்க. அடுத்து அவங்க தம்பி தனியா சாப்பிட்டுட்டுப் போவாரு. இதையெல்லாம் நோட் பண்ணுன விஜய் டைரக்டாவே அவங்ககிட்ட கேட்டுடுவாரு. இதன் மூலமா என்ன சொல்ல வர்றாங்கனா `அக்கம்பக்கத்துலேயும் சாப்பாட்டைக் கொடுத்து ஷேர் பண்ணிப் பழகுங்க மக்களே’ன்னுதான் சொல்ல வர்றாங்க மக்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick