இசங்கள் ஆயிரம்!

ம் நாட்டில் கம்யூனிசம், மார்க்ஸிசம், டெரரிசம் அப்படிங்கிற மாதிரி இன்னும் நிறைய `இசங்கள்' இருக்கு பாஸ். நம்ம யூத் ஜெனரேஷன் மட்டுமே ஃபாலோ பண்ற இந்த மாதிரி இசங்கள்லாம் என்னனு தெரிஞ்சிக்கலாமா..

 ஜெலுசியலிசம் :
  ஜெலுசியலிசம்கிறது சில பேர்கிட்ட மட்டும் இருக்கிற ரொம்ப மோசமான ஒரு இசம் பாஸ். யாராவது சாதிச்சிட்டாலோ... இல்லை, ஒரே நாள்ல ஃபேமஸ் ஆகிட்டாலோ அதைப் பார்த்து வயித்தெரிச்சல் ஆஃப் இந்தியாவா வருத்தப்படுற எல்லோரும் இந்த இசத்துக்குள்ளதான் வருவாங்க. ரொம்ப வயிறு எரிஞ்சா போய் ஜெலுசில் குடிங்க பாஸ்!

 காலை வணக்கமிசம் :
  காலை வணக்கமிசம்கிறது ஃபேஸ்புக்ல இருக்கிற ரொம்ப மோசமான ஒரு இனம். இவங்கள்லாம் நாம எந்த போஸ்ட் போட்டாலும் அதுக்கு `என் பொண்ணு படிக்கிறது கான்வென்ட்டு, போடுவேண்டா கமென்ட்டு'னு சொல்லிட்டு எல்லாத்துலயும் கமென்ட் பண்ணுவாங்க. இவங்க பண்றதுலேயே ரொம்பக் கஷ்டமான கமென்ட் `காலை வணக்கம்' கமென்ட்தான் பாஸ்.

 ரிவ்யூவிசம் :  தமிழ்நாட்டுல இருக்கிற முக்கால்வாசி வயசுக்கு வந்தங்க எல்லாம் இந்த இசத்துக்குள்ளதான் வருவாங்க. எந்தப் படம் பார்த்தாலும் அதுக்கு உடனே பக்கம் பக்கமா எழுதியோ... இல்லை, பல நிமிஷத்துக்கு பேசி வீடியோ போட்டோ ரிவ்யூ பண்ணுவாங்க. நல்ல படம் வந்தாகூட அதைக் கழுவி ஊத்தி தன்னை ஒரு உலக சினிமாவாதியா காட்டிக்கிற எல்லாரும் இந்த இசத்தைச் சேர்ந்தவங்கதான்.

 பிரபலாயிசம் :  ஃபேஸ்புக் பிரபலங்கள் ஆஃப் பிராப்ளங்கள் எல்லோரும் இந்த இசத்தைச் சேர்ந்த புனிதமானவங்கதான். தங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு, கமென்ட் பாக்ஸை ஆஃப் பண்ணி வெச்சுட்டு, ஃபார் ரெக்வெஸ்டடையும் அக்செப்ட் பண்ணாம `பிரபலம்டாவ்வ்'னு சுத்திக்கிட்டு இருக்கிறவங்க எல்லோரையும் தாராளமா பிரபலாயிசம்னு சொல்லிக் கூப்பிடலாம்.

 அஜித்திசம் :  இந்த அஜித்திசத்துக்கு தலயிசம்னு இன்னொரு பேரும் இருக்கு. இவங்க அஜித் படம் எப்போ வந்தாலும்... ஏன், தியேட்டருக்கு வரவே இல்லைனாலும்கூட எப்படியாவது ஊர்ல உள்ள எல்லோரையும் கூட்டிட்டுப் போய் பார்த்துட்டு வந்துடுவாங்க. அது மட்டும் இல்லாம அதைப் பற்றி பாராட்டி பெருசா ரிவ்யூவும் எழுதுவாங்க.

 விஜயிசம் : தலயிசம் எப்படியோ அதே மாதிரியே விஜயிசத்துக்கு தளபதியிசம்னு இன்னொரு பேரும் இருக்கு. விஜயிசம் ஃபாலோ பண்ற எல்லோரும் `100 கோடிடாவ்' அப்படின்னுதான் கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க. ஒரு படம் ரிலீஸ் ஆகிறத்துக்கு முதல் நாளே அதுக்கு 100 கோடி வசூல் சாதனைனு கட் அவுட் அடிச்சு வெச்சு ஜாலி பண்ணிட்டு இருப்பாங்க.

 இலக்கியயிசம் :  இந்த இலக்கியவாதிகள் பேசியது எல்லாமே இந்த இலக்கியயிசத்துக்குள்ளதான் வரும். மாசத்துக்கு ஒரு புக் எழுதுறவங்ககூட அமைதியா இருப்பாங்க பாஸ். பட், இரண்டு வருஷத்துக்கு ஒரு புக் எழுதிட்டு இலக்கியவாதிடாவ்னு சொல்லி, இருக்கிற எல்லோரையும் காலாய்ச்சிட்டு தனியாவே வாழுற வித்தியாசமான இனம் பாஸ் இவங்க.

மொத்தத்துல இந்த இசங்கள் அத்தனையும் ஒரே வெசம் வெசம்!

- லோ.சியாம் சுந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்